வெளிப்புறப் பொறிமுறை எதனையும் ஏற்கமாட்டோம்; ஜெனீவாவில் அமைச்சர் விஜித ஹேரத் திட்டவட்டமாக அறிவிப்பு

நாட்டில் பிளவுகளை உருவாக்கி, நடைபெற்று வரும் தேசிய நல்லிணக்க செயல்முறையை சிக்கலாக்கும் எந்தவொரு வெளிப்புற பொறிமுறையையும் இலங்கை எதிர்க்கின்றது என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவாவில் தெரிவித்திருக்கிறார்
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு நேற்று திங்கட் கிழமை ஆரம்பமாகியிருந்தநிலையியல் அங்கு உரையாற்றிய அமைச்சர்ஹேரத் , ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள் நாட்டில் ஏற்பட்டுவரும் வளர்ச்சியானது , உள்நாட்டு செயல்முறைகள் மூலம் அனைத்து இலங்கையர்களின் உரிமைகளையும் நல்வாழ்வைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவுமான அரசாங்கத்தின் உண்மையான அர்ப்பணிப்பையும் உறுதியையும் தெளிவாகவெளிப்படுத்துகின்றது என்றும் குறிப்பிட்டுள் ளார்
“எ மது உள்நாட்டு சட்ட கட்டமைப்பிற்கு ஏற்ப மக்களின் பன்முகத்தன்மையை மதிக்கும் மற்றும் கொண்டாடும் ஒரு நாட்டை நோக்கிச் செயல்பட நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்த, பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பகுதிகளில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப உதவி மூலம் சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும். குறுகிய காலத்திற்குள் ஏற்பட்ட முன்னேற்றத்தை கவனத்தில் கொள்ளுமாறு இந்த பேரவையை நாங்கள் வலியுறுத்துகிறோம். தேசிய செயல்முறைகள் மூலம் இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கு இந்த வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்துவதற்குத் தேவையான நேரத்தையும் இடத்தையும் வழங்குவதற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவை நாடுகிறோம், ”என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்
ஐ. நா.. மனித உரிமைகள்பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கினால் இலங்கை குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு அரசாங்கத்தின் சார்பாகபதிலளித்து அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றுகையில் மேலும் குறிப்பிட்டதாவது
உள்நாட்டு வழிமுறைகள் மூலம் மட்டுமே பொறுப்புக்கூறல் செயல்முறையை முன்னெடுக்க இலங்கை உறுதிபூண்டுள்ளது:
விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான எந்தவொரு வெளிப்புற தலையீடு அல்லது வழிமுறைகளையும் இலங்கை நிராகரிகின்றது
அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது
எனவே, புதிய அரசாங்கத்தால் ஏற்பட்ட முன்னேற்றத்தை அங்கீகரிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை கோருகின்றோம் , மேலும் பொறுப்புக்கூறல் வழிமுறைகள் உட்பட அனைத்து இலங்கையர்களுக்கும் நிர்வாகம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற கூடுதல் அவகாசம் தேவை என்றார்.
![]()