காணொளிகள்

விநாயகர் சதுர்த்தி ஆன்மீக எழுச்சி ஊர்வலத்தையடுத்து 15 விநாயகர் சிலைகள் கரைப்பு

கொட்டகலையில் இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி ஆன்மீக எழுச்சி ஊர்வலத்தையடுத்து 15 விநாயகர் சிலைகள் கொட்டகலை வாவியில் கரைக்கப்பட்டன

விநாயகர் சதுர்த்தி ஆன்மீக எழுச்சி ஊர்வலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது . அதனையடுத்து விஜர்னம் கரைத்தலுக்காக கொட்டகலை பகுதியில் இருந்து பத்து இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டவிநாயகர் சிலைகள் கொமர்ஷல் பகுதியில் உள்ள வாவியில் கரைக்கப்பட்டன.

நுவரரெலியா விஷ்வ ஹிந்து பரிஷாத், இலங்கை கிளை ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆன்மீக எழுச்சி ஊர்வலமானது கொட்டகலை பெரிய மண்வெட்டி தோட்டத்தில் இருந்தும்,கொட்டகலை பிரதேச சபைக்கு அருகாமையில் இருந்தும் புறப்பட்டு இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஹட்டன் -கொட்டகலை பிரதான வீதியின் ஊடாக இடம்பெற்றது.

இந்த விநாயகர் ஊர்வலத்தின் போது காவடி,கோலாட்டம்,கும்மி போன்ற பல்வேறு கலாசார நிகழ்களும் ஊர்வலத்தை அலங்கரித்தது. கொட்டகலை மண்வெட்டி தோட்டத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்வலமானது கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உள்ள வாவிக்கு வந்து சேர்ந்ததும் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 15 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதன் போது பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த எழுச்சி ஊர்வலத்தில் பெரிய மண்வெட்டி தோட்டம்,சின்னவெட்டி தோட்டம், ரொசிட்டா, ஸ்டொனிகிளிப், ஹரீங்டன்,லொக்கில்,பளிங்குமலை, கல்கந்தை, கொமர்ஷல் தர்மபுரம்,மூங்கில் கொட்டகலை, எதன்சைட்.ஆகிய தோட்டப் பகுதிகளி உள்ள சிலைகள் இந்த எழுச்சி பேரணியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கொட்டகலை கொமர்ஷல் வாவி ஐ விநாயக தீர்த்த வாவி யாக விஷ்வ ஹிந்து பரிஷாத் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *