முகநூல்

இது கதையல்ல.. நிஜம்..!

நேற்று ஆகஸ்ட் 20 மதியம் 2 மணிக்கு சென்னை முகப்பேர் வெஸ்டில் உள்ள SBI வங்கிக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.
அப்போது முகப்பேர் ஈஸ்ட் பஸ் ஸ்டாப் வழியாக வரும்போது ஒரு நபர் தலையில் ரத்தம் கொட்ட கொட்ட நடந்து சென்று கொண்டிருந்தார்.
எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்களே தவிர, யாரும் என்ன ஆச்சு? என்று கேட்கவோ உதவி செய்யவும் இல்லை.
எனக்கு மனம் கேட்காததால் நான் வண்டியை திருப்பிக் கொண்டு சென்று அந்த நபரிடம், “என்னாச்சு… வாங்க ஹாஸ்பிடல் போலாம். வண்டியில உட்காருங்க” என்றேன்.
அவர் தலையில் இருந்து கையை எடுத்தவுடன் ரத்தம் பீறிட்டு அடிக்கிறது. உடனே அமுக்கி பிடித்து, ஆட்டோவில் ஏற சொன்னால் ஆட்டோக்காரன் ஏற்றவில்லை, சரியென 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தேன்.
பிறகு விசாரித்தபோது முகப்பேர் ஈஸ்ட் ஜே ஜே நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு வழக்கு விஷயமாக போனபோது நான்கு போலீஸ்காரர்கள் சேர்ந்து அடித்தார்கள்.
ரத்தம் வந்தவுடன் போலீஸ் ஸ்டேஷன் விட்டு விரட்டி விட்டார்கள். அதனால் நான் ஹாஸ்பிடல் போக நடந்து வந்து கொண்டிருந்தேன்” என்றார்.
பிறகு மயக்கம் அடைந்து விட்டார். பிறகு எழுப்பி தண்ணீர் கொடுத்து, ஆம்புலன்ஸ் வந்த பிறகு, ஆம்புலன்ஸில் ஏற்றினேன்.
உடனே ஆம்புலன்ஸ் டிரைவர் யாராவது ஒருவர் துணைக்கு வர வேண்டும். இல்லையென்றால் அழைத்துக் கொண்டு போக முடியாது என்றார்.
சரி.. என்று உடனே உடன் சென்று கீழ்பாக்கம் மருத்துவமனையில் அட்மிட் செய்து விட்டு அவர் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிவித்து விட்டு, அவர்கள் வந்த பின் மருத்துவமனையில் இருந்து கிளம்பினேன்.
அப்போது அவர் கையெடுத்து கும்பிட்டு, நன்றி அண்ணா என கூறினார். எனக்கு அழுகையாக வந்துவிட்டது.
ஏதோ ஒரு உயிர் இன்று பிழைத்துக் கொண்டது. கடவுளுக்கு நன்றி.
Velmurugan K போன்: 7845440341
(இது உத்தரப் பிரதேசம் அல்ல, தமிழ்நாடு! என்ன ஆச்சு தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை?)

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *