கவிதைகள்

 “ஏந்தியே இதயம் வைத்து எம் ஈழத்தார் வாழுகிறார்”…. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

ஈழமென்னும் நாமம் சொன்னால்
இன்ப மங்கே பொங்குது
ஆழக்கடல் அதனைச் சுற்றி
அரணாய் அமைந்து இருக்கிது
 
வாழையொடு கமுகு தென்னை
வைரப் பனை  வளருது
வற்றாத நதியுடனே நீரூற்றும்
வரமாய் அங்கே இருக்கிது
 
வடக்கிருந்து தெற்கு வரை
நீள அளவில் இருக்கிது
கிழக்கிருந்து மேற்கு வரை
அகன்ற அளவில் இருக்கிது
 
செந் தமிழும் சிங்களமும்
ஈழ மண்ணில் ஒலிக்குது
வந்து போன வெள்ளையரால்
அவர்கள் மொழியும் வாழுது
 
குறிஞ்சி முல்லை மருதமொடு
நெய்தல் பாலை இருக்கிது
குவளை முல்லை தாமரையும்
குளம் நிறைய மலருது
 
கோட்டை பல இருக்குது
குன்று பல இருக்கிது
வாட்ட மில்லா மரங்களுடன்
வளமாய் காடும் வளருது
 
ஆறு மலை ஏரியெலாம்
அமைந்து ஈழம் விளங்குது
அழகு முத்து இரத்தினங்கள்
அங்கு குவிந்தும் கிடக்குது
 
ஆழ நெடுங் கடலினாலே
மீன் வளமும் பெருகுது
அன்னியர்கள் விரும்பி வர
அழகு நிரம்பி ஜொலிக்குது
 
பாலும் தேனும் தயிரும்
இருக்கும் பாங்காய் தேயிலை
மலை நாட்டில் வளரும்
யாவும் ஈழமீய்ந்தே நிற்கும் 
 
அதிசமாய் கோண மலையில்
வெந் நீரூற்றும் இருக்கிது
அழகுத் திருக் கோவிலிலே
அம்மை அப்பன் உறைகிறார் 
நல்ல ஒரு துறைமுகமாய்
திரு கோணமலை விளங்குது
நாடிப் பல வெளிநாட்டார்
ஓடி அங்கே வருகிறார்
 
பாடல் பெற்ற தலங்களும்
ஈழம் எங்கும் இருக்குது
பல சித்தர் வழ்ந்ததாய்
பல கதைகள் இருக்கிது
 
ஆழமுடை அறிஞர் பல
அரண் ஆகி இருக்கின்றார்
அது ஈழ நாட்டுக்கு
அருட் கொடையாய் ஆகிருக்கு 
 
நல்லை நகர் நாவலர்
நம் ஈழச் சொத்து
வள்ளல் இராம நாதன்
வாய்த்த நல் சொத்தே
 
சொல்ல வல்ல சுவாமி
முத் தமிழின் வித்தகர்
அடிகளார் ஈழ மண்ணின்
அரிய தமிழ் சொத்தே 
 
ஈழ மண்ணில் பிறந்தார்
எங்கு அவர் சென்றாலும்
பிறந்த மண்ணை மறவா
மனம் எண்ணி வாழுகிறார் 
 
ஓடி ஓடி உழைத்தாலும்
உணர் வெல்லாம் ஈழத்தை
ஏந்தியே இதயம் வைத்து
எம் ஈழத்தார் வாழுகிறார்.
 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
     மெல்பேண் …..  அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *