காணொளிகள்

ராசா என் ராசா!… கிறிஸ்டி நல்லரத்தினம்

 

என் ராசா என் ராசா
எங்கையா போனாய் நீ
தேடாத இடம் இல்ல – உன்ன
பாடாத குரலில்ல!
ராசா என் ராசா
என் உசிரே நீ தாயா
உறவே நீதாயா

தனியாக மான் ஒன்று தடம் மாறி தவிக்கையிலே
நிலம் மாறி நீ எங்கே போனாயோ என் ராசா?
நித்தமும் உன் நினைவு
அந்த நிலவு தான் என் உறவு

இரவெல்லாம் தூக்கமிலல
இதயமெல்லாம் உன் நெனப்பு
இலவு காத்த கிளி போல
நாள எண்ணி நான் இருக்கேன்
பறந்து போன தென்ன ராசா
என்ன பரிதவிக்க விட்டதென்ன?

தவிப்பேன் என்றறிவாய்
தவிக்கவிட்டதேன் ராசா
தல வாழை இலை போட்டு
உன் நிழலுக்கு ஊட்டி விட்டு
பசியோட பார்த்திருக்கேன்.
பசி போன திச பார்த்து
பாவி நான் காத்திருக்கேன்.

ஊரெல்லாம் திருமணமாம்
எனக்கு மட்டும் நீ இல்லை
கெட்டி மேளம் என் காதில் பறை ஒலியாய் கேட்குதையா
ஆயிரம் உறவிருந்தும்
உன் உறவே வேணுமையா
ஓடி வந்து அணைச்சுக்க
ஒன்றாகி வாழ்ந்திருப்போம்

பிரிவொன்று இல்லாத பூமி தேடி போயிடுவோம்
புதுசாக வீடு கட்டி
புள்ள குட்டி பெத்துக்குவோம்
பொல்லாத உலகத்தில நமக்கெண்ணு ஒண்ணுமில்ல
புது உலகம் படைச்சு அங்கே
பரம்பரைய பயிரிடுவோம்.

 

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

கிறிஸ்டி நல்லரத்தினம் எழுதிய பாடலை முதன்முறையாக
எனது YouTube channelஇல் பதிவேற்றினேன்.
பாடலுக்கு இசையமைத்து பாடிய Alக்கும் ஒரு நன்றி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *