இலங்கைத் தமிழர்களின் அரசியல் நடைப் பயணம்… ஏலையா க.முருகதாசன்

போடு பள்ளடி வீட்டுக்கு நேரே என்பதன் அர்த்தம் தெரியாத ஒன்பது வயதில் மாமரத்தின் கீழ்க் கொப்பொன்றில் இருந்து கொண்டு, தமிழரசுக் கட்சியின் கொடியை பார்த்த நினைவில் ஒரு தாளில் பச்சை சிவப்பு மஞ்சள் வர்ணங்களில் அதைக் கீறி ஈக்கில் சோற்றவல்களை நசுக்குp ஒட்டி கொடியை தூக்கிப் பிடித்து தெல்லிப்பழையில் பண்டத்தரிப்புக்கு போகும் வீதியில் போவோர் வருவோரின் கவனத்தைத் என்பக்கம் திரும்ப போடு பள்ளடி வீட்டுக்கு நேரே என்று சொன்ன நாளிலிருந்து தமிழரசியல்வாதிகள் என்ன அரசியலஇ செய்கிறார்கள் என்பது தெரியவேயில்லை.
இவர்களின் அரசியல் நடையை நல்லாய் உற்றுக் கவனித்தால் உணர்ச்சிகரமான கோசத்துடன் நடையை வேகமாக ஆரம்பித்து பிறகு மெல்ல மெல்ல வேகம் குறைந்து இந்த முறை எல்லாம் சரிவரும் என்று மக்கள் காத்திருக்க இந்த நடை சரியில்லை என்று தொடங்கிய இடத்துக்குத் திரும்பிப் போய் உனது அடையாளம் என்ற இடத்தில் காலை வைத்துக் கொண்டு நிற்பார்கள்
ஆரவாரமாக இந்தா தமிழர்களுடைய உரிமைப் பிரச்சினையை தீர்த்தே தீருவாம் அதுவரைக்கும் பல்லிலை பச்சைத்தண்ணிகூட படவிடமாட்டோம் என்பது போல ஒன் யுவர் மார்க் கெற் ரெடி சொல்லுமுன்பே ஒடத் தொடங்கி யார் முந்தி ஒடுவது எனப் போட்டி போட்டு சிலர் இடையில் நின்றுவிட ஒவ்வொருவரும் ஒவ்வொரு ipசையில் திசையில் ஓடுவார்கள்.ஒவ்வொரு அரசியல் திசையிலும் ஓடியவர்கள் மற்றவர்கள் அரசியல் திசைமாறி ஓடிவிட்டார்கள் எனக் குறை சொல்லி அறிக்கை விடுவார்கள்.
இதைப் பார்த்த மக்களும் எங்களுடைய ஆட்கள் சாதாரணமானவர்களா எனப் புளகாங்கிதமடைய சரியான இராஜதந்திர வழியைத் தெரிவு செய்யாமல் தமிழர்கள் சிறுபான்மையினம் என்பதை யோசிக்காமல்,பெருபான்மையினத்துக்கு எசமானர்களாகவே எப்போதும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள்தானே எல்லாத் திணைக்களங்களிலம் ஐயாக்களாக இருந்தவர்களென திமிர்த்தனமான கதைகளைக் கதைத்ததால் அந்தந்த திணைக்களங்களில் சாதாரண பியோனாக இருக்கும் ஒரு சிங்களக் குடிமகன் யோசிப்பானா யோசிக்கமாட்டானா என்பதைக்கூடச் சிந்திக்காமல் போதாக்குறைக்கு மோட்டுச் சிங்களவன் என்று கூறினால் அவன் உள்ளுக்குள்ளை கோபப்படுவான்தானே.
இலங்கைத் தீவின் மூத்தகுடிகள் தமிழர்களே,சுதேசிய மக்கள் தமிழர்களேயெனில் வந்தேறு குடிகளான சிங்கள மக்களின் சனத் தொகை தமிழர்களின் சனத்தொகையைவிட பெருகியது எவ்வாறு என இந்தத் தமிழரசியல்வாதிகள் யோசித்தார்களா.

தமிழரசியல்வாதிகள் சுதந்திரன் பத்திரிகையை ஆரம்பித்து என்ன செய்தார்கள் என்றால் திரு.ஜி.ஜி.பொன்னம்பலத்தை,திரு.அல்பிரட்: துரையப்பபாவை திரு.சிவசிதம்பரத்தை கம்யூனிஸ்ட் திரு.கந்தையாவை குறை சொல்லி கட்டுரைகள் எழுதினார்களே தவிர வேறு எதனையும் செய்யவில்லை.
தமிழர்களை தமிழ் இனவாதிகளாக வளர்த்துவிட்டு தேர்தல்களில் உணர்ச்சிப் பிழம்பாக தேர்தல் மேடைகளில் பிரச்சாரம் செய்தனர்.
உணர்ச்சிகரமான பேச்சுக்களைக் கேட்கும் இலங்கை அரசு தமிழர்களின் உரிமைளைக் கொடுத்துவிடும் அல்லது அதற்கு அணுசரனையாக நடந்த கொள்ளும் என தமிழரசியல்வாதிகள் நினைத்தது மட்டுமல்ல தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் புத்திசாலித்தனமாகச் சிந்திப்பதையும் தடுத்தனர்.

சிங்கள அரசியல்வாதிகளுடன் நாடாளுமன்றத்தில் உரத்துக் கதைப்பாதாலோ எமது பண்டைய வரலாற்றை சிங்கள அரசியல்வாதிகளுக்குச் சொல்வதாலோ தீர்வு ஒன்றும் ஏற்படப் போவதில்லை.
நான் எழுதும் இந்தக் கருத்துக்களானது எழுத்தமானத்துக்கு எழுதவில்லை.தமிழரசுக்கட்சியுடன் ஆரம்பகாலத்திலிந்து ஏதோ ஒரு வகையில் அண்மித்து நின்றதுடன்,எனது அண்ணை ஆரம்ப காலங்களில் தேர்தலின் போதெல்லாம் அதன் ஆதரவாளர்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் எழுதிக் கொடுத்ததை அருகிலிருந்து பார்த்தவன் என்ற ரீதியில் மட்டுமல்ல 1961 ஆண்டு நடைபெற்ற சத்தியாக்கிரகத்தில் மாணவனாகக் கலந்து கொண்டவன் என்பதுடன் எனது தந்தையும் தாயாரும் அக்காலகட்டத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்திற்கான ஆதரவுப் பேரணிகளில் கலந்து கொண்டதையும் நினைத்துப் பார்க்கிறேன்.
எமது அரசியல்வாதிகள் தமிழர்களுக்கான உரிமைக் கோரலில் தமிழ்மக்களை
அறிவுபூர்வமானவர்களாகச் சிந்திக்க வைத்தார்களா என்றால் நூற்றக்கு 85 வீதம் வெறும் உணர்ச்சியூட்டக்கூடிய சொல்லாடல்களையும் சக மாற்றுக்கட்சி தமிழரசியல்வாதிகளையும் மேடைகளில் குற்றம் குறை சொல்லி அதற்கு கைதட்டல்களையும் பாராட்டுக்களையும் வாங்கினார்னகளே தவிர இவர்களால்இலங்கையரசுடன்,; இராஜதந்திரமாக சிங்கள மக்கள் கோப்படடாமலும் அரசாங்கத்தின் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் அரசியலை நடத்த முடியவில்லை.
அன்றைய வெளிமடை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.எம்.பி இராஜரத்தினா,தம்பதெனியா நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.ஜி.சேனநாயக்கா அவர்கள் கக்கிய இனவாத விசத்துக்கு பகுத்தறிவு சார்ந்த அறிவபூர்வமான பதில்களைச் சொல்வதைத் தவிர்த்து அவர்கள் போலவே தமிழரசியல்வாதிகளும் இனவாதப் பேச்சுக்களைப் பேசத் தொடங்கினர்.
இது போக வேண்டிய பாதையிலிருந்து விலகி தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் இனவாத விசத்தைக் கக்கும் அரசியலாக உருமாறியது.
காங்கேசன்துறைத் தொகுதியில் திரு.நடேசபிள்ளையும்,திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் தேர்தலில் போட்யிட்ட போது செவிட்டுச் செல்வநாயகத்தின் தேர்தல் முடிவுமணி தெல்லிப்பழை சேர்ச்சில் ஒலிக்கும் என்றுஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் துண்டுப்பிரசுரங்களை வெளிட்டும் குடும்பி நடேசபிள்ளைக்கு காங்கேசன்துறைத் தொகுதியில் என்ன வேலை என்று தமிழரசுக் கட்சியின் அதரவாளர்கள் துண்டுபிரசுரங்களை வெளியிட்டு இதுதான் தமிழர்களின் அரசியல் என தமிழர்களை முட்டாளாக்கினார்கள்.
சிங்கள அரசியல்வாதிகளுக்கு பின்னால் பெரும்பான்மை சிங்கள மக்கள் அணிதிரண்டு நிற்கிறார்கள் என்பதை என்றுமே தமிழரசியல்வாதிகள் நினைத்துப் பார்த்ததேயில்லை.
ஒரு காலகட்டத்தில் சிங்கள அரசியல்வாதிகளில் புத்திசீவிகளும் அறம் சார்ந்து சிந்திக்கும் அரசியல்வாதிகளும் தமிழரின் பிரச்சினைகளை புரிந்து கொண்டிருந்தாலும் அவர்களையும் தம்மோடு இணைக்கத் தவறினர்.
திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் கைத்தொழில் அமைச்சராக இருந்த போது காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை,வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை,பரந்தன் இரசாயணத் தொழிற்சாலை போன்றவற்றை ஏற்படுத்தி நாகர்கோவில் பகுதியில் கண்ணாடித் தொழிற்சாலையை ஆரம்பிக்கும் திட்டத்தை வைத்திருந்தார் என்பதை தமிழரசுக் கட்சியினர் கண்டும் காணாமல் விட்டதுடன் அவரைப் பாராட்டக்கூட மனமின்றி தம்மால் மட்டுமே எல்லாம் நடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திரு:ஜி.ஜி.பொன்னம்பலம் செய்த நன்மைகளை மறந்து காழ்ப்புணர்வுற்றவர்களாக,மலையகத் தமிழர்களில் ஒரு பகுதியினரை இந்தியாவுக்கு அனுப்ப ஆதரவு கொடுத்தவர் என்பதற்காக அவரின் வழக்குகளில் வந்த ஊசி நூல் கதையைச் சொல்லியும் எழுதியும் பகைமையை வளர்த்துக் கொண்டனர்.
(தொடரும்)
![]()