பலதும் பத்தும்

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் (26) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, கொடியேற்றம் இடம்பெற்றது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து இடம்பெற்று, ஜூலை 09ஆம் திகதி காலை தேர் திருவிழாவும் மறுநாள் 10ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.

மகோற்சவ காலங்களில் பக்தர்களின் நலன் கருதி, விசேட படகு சேவைகள் , பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதுடன், சென் ஜோன்ஸ் முதலுதவி படையினர் , சாரணர்கள் , செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோரும் சேவையில் ஈடுபடவுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button