பலதும் பத்தும்

ஏர் இந்தியா விமானத்தின் இறக்கையில் பறவைக்கூடு- 3 மணிநேரத்தின் பின்னர் பாங்கொங் புறப்பட்டது!

மும்பையிலிருந்து பாங்கொங் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் இறக்கைப் பகுதியில் பறவைக்கூடு ஒன்று இருந்துள்ளது.

இதனை விமானத்தில் பயணிக்கவிருந்த பயணி ஒருவர் அவதானித்து அதனைப் புகைப்படம் எடுத்து விமானப் பணிப்பெண்ணிடம் காட்டியிருந்தார்.

விமானப்பணிப்பெண் அதனை விமான நிலைய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியதையடுத்து விமான நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து இறக்கையில் இருந்த பறவைக்கூட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணிநேரத்திற்குப் பின்னர் விமானம் சரிசெய்யப்பட்டு மும்பையிலிருந்து பாங்கொங் நகருக்கு  ஏர் இந்தியா விமானம்  புறப்பட்டுச் சென்றுள்ளது.

குஜராத் அகமதாபாத்தில் இடம்பெற்ற ஏர் இந்தியா விபத்தையடுத்து ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடர்ந்து பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button