பலதும் பத்தும்

குழந்தையைப் போல் நடைபழகுகிறேன் – விண்வெளியில் நெகிழ்ந்து பேசிய சுக்லா!

விண்வெளியின் பூச்சியப்புவியீர்ப்பு விசையில் தன்னைப் பழக்கிக் கொள்வதில் குழந்தைபோல் உணர்வதாக  இந்திய  விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின்  ஆக்சியம்-4  டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கடந்த (ஜூன் 25) புறப்பட்டது. பல தடவைகளாகத் தடைப்பட்ட ஆக்சியம் 4 விண்கலத் திட்டம் தற்போது விண்வெளியை சென்றடைந்துள்ளது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்திய குடிமகன் விண்வெளிக்குச் சென்றுள்ளார். விண்வெளியில் கால்பதித்த தருணத்தை அவர் நெகிழ்ச்சியுடன் நேரடியாகத் தெரிவித்துள்ளார்.

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா டிராகன் விண்கலத்திலிருந்து நேரலையாக காணொளி ஒன்றை வெளியிட்டு அவரது நெகிழ்ச்சித் தருணத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்தக் காணொளியில் அவர்  தெரிவிக்கையில்,

வணக்கம் . நான் இங்கே பூச்சியப் புவியீர்ப்பு விசைக்கு என்னைப் பழக்கப்படுத்திக்கொண்டிருக்கின்றேன். ஒரு குழந்தை போல் நடை பயின்றிருக்கின்றேன்.  என்னை நானே எப்படிக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது பற்றிக் கற்றுக்கொண்டிருக்கின்றேன்.

இங்கு ஒவ்வொரு தருணத்தையும் நான் மகிழ்ச்சியுடன் இரசிக்கின்றேன். ஆக்சியம் 4 விண்கலத்திட்டம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப விளையும் இந்தியாவின் விண்வெளித்திட்ட முன்னெடுப்புகளுக்கு ஒரு வலுவான முன்னேற்றம் மற்றும் ககன்யான் திட்டத்துக்கும் ஒரு முன்னேற்றப்பாதை என  அவர் காணொளியில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்திய வீரரின் விண்வெளிப்பயணம் இந்தியா முழுவதுமே கொண்டாடப்பட்டது.

அவரது இந்தப் பயணம் இஸ்ரோவின் விண்வெளி உயிரியல் மற்றும் விண்வெளி விவசாய ஆராய்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button