உலகம்

சீனாவில் திடீரென இடிந்து விழுந்த பாலம் – நடுவானில் சாரதியுடன் தொங்கிய லொறி!

சீனாவில் திடீரென இடிந்து விழுந்த பாலத்தால் சாரதி ஒருவர் லொறியுடன் நடுவானில் தொங்கிக் கொண்டிருந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில்

வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் தென்மேற்கு குய்சோ மாகாணத்தில் உள்ள ஜியாமென்-செங்டு நெடுஞ்சாலையின்  பாலம், கடந்த  பெய்த மழையால் ஏற்பட்ட  நிலச்சரிவின் அழுத்தத்தில் இடிந்து விழுந்துள்ளது.

குறித்த நெடுஞ்சாலையில் சரக்கு லொறியில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் திடீரென அந்தப் பாலம் இடிந்து விழுந்ததில் பாலத்தின் விளிம்பில்  சரக்கு லாரி தொங்கிக் கொண்டது. இந்தக் காட்சி அந்தப்பகுதியில்  பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

விடயத்தை அறிந்த  அவசர தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டு   லொறியின் கூரை மீது ஏணியை எறிந்து,  சாரதியை கவனமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிர்ச்சியிலிருந்து மீண்ட லொறியின்  சாரதியான  யூ குவோச்சுன் தனது திகல் தருணங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவிக்கையில்,

“எனது  லொறியின் முன்பக்கம் பின்னர் இடிந்து விழுந்த பகுதியை அடைந்தபோது, ​​தரை லேசாக மூழ்குவதை உணர்ந்தேன். நான் உடனடியாக பிரேக்குகளை அழுத்தினேன். ஆனால் அந்த உந்துதல்  லொறியை முன்னோக்கிக் கொண்டு சென்றது. திடீரென்று, எனக்கு முன்னால் இருந்த முழு பாலமும் மறைந்துவிட்டது. நான் பயந்து உறைந்து போனேன்.” – என்றார்.

இது தொடர்பான சிசிடிவி காணொளியும் லொறியின் சாரதி பகிர்ந்து கொண்ட விடங்களும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைராலி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *