பலதும் பத்தும்

பெண்ணாக மாறிய கிரிக்கெட் வீரர்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன், தற்போது அனயா பங்கர் என்ற பெயருடன் முழுமையாக பெண்ணாக மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இவர் தான் முற்றிலும் பெண்ணாக மாறியள்ளதாகவும்  மற்றும் உடலமைப்பு மாற்று சிகிச்சைகள் முடிவடைந்துள்ளதாகவும், மீண்டும் கிரிக்கெட் விளையாடும் ஆசை இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

ஆர்யன் இருந்தபோது சர்பராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்றோருடன் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் கொண்ட இவர்,

தற்போது ஐசிசி மற்றும் பிசிசிஐ-யிடம் விளையாட அனுமதி கோரியுள்ளார்.

இந்நிலையில், மாற்றுபாலின நெறிமுறைகளுக்கு இடையிலான சிக்கல்களைத் தாண்டி,

தனது கனவை நேர்மையாக பின்தொடர விரும்பும் அனயாவின் முயற்சி சமூக வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button