பலதும் பத்தும்

15 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த மனைவிக்கு வேறு திருமணம் செய்துவைத்த கணவன்

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன் மனைவி வேறொரு நபருடன் நெருக்கமாக இருப்பதைக் கண்டதாகக் கூறியுள்ள கணவன், மனைவிக்கும் அந்த நபருக்கும் திருமணம் செய்துவைத்தார்.

மனைவிக்கு வேறு திருமணம் செய்துவைத்த கணவன்

மேகாலயா தேனிலவுக் கொலை, பல ஆண்களுக்கு பயத்தை ஏற்படுத்திவிட்டதோ என்று தோன்றுகிறது.

ஆம், உத்தரப்பிரதேசத்தில் வாழும் ஹரிஷ்சந்திரா (42), தன் மனைவியான கரிஷ்மா (36), ஷிவ்ராஜ் சௌஹான் என்னும் நபருடன் நெருக்கமாக இருந்தபோது கையும் களவுமாக கண்டுபிடித்ததாக கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, கரிஷ்மாவை கோவிலுக்கு அழைத்துச் சென்ற ஹரிஷ்சந்திரா, தன் மனைவியின் நெற்றியிலிருந்த குங்குமத்தை அழித்துள்ளார். 

அதைத் தொடர்ந்து கரிஷ்மாவும் ஷிவ்ராஜும் மாலை மாற்றிக்கொண்டுள்ளனர்.

கரிஷ்மா தனக்கு விஷம் வைக்க முயன்றதாகவும், தன் மகனுக்கு போதைப்பொருட்களைக் கொடுத்து அவனைக் கெடுக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார் ஹரிஷ்சந்திரா.

 

இந்நிலையில், தனக்கும் தன் கணவனுக்கும் பிரச்சினை இருப்பது உண்மைதான் என்று கூறியுள்ள கரிஷ்மா, ஆனால், தனக்கு ஷிவ்ராஜுடன் எந்த தொடர்பும் இல்லையென்றும், தன்னைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button