கட்டுரைகள்

சதி…  ஏலையா க.முருகதாசன்

நெஞ்சை இன்னும் பதைபதைக்க வைத்துக் கொண்டிருக்கும் அகமதபாத்தில் (குஜராத்) நடைபெற்ற எயர் இன்டியா விமான விபத்து ஒரு சதியேதான் எனத் திட்டவட்டமாகத் தெரிகிறது.

டெல்லியிலிருந்து அகமதபாத்திற்கு வந்த அந்த குறிப்பிட்ட விமானம் விபத்துக்குள்ளாக வேண்டிய விமானமே என ஊகிக்க முடிகின்றது என்பதுடன் சில வேளை இவ்விமானம் டெல்லிக்கும் அகமதாபாத்துக்குமிடையில்கூட விபத்தைச் சந்தித்திருக்கலாம்.
டெல்லி விமான நிலையத்தில்; இவ்விமானம் பரிசோதிக்கப்பட்ட போது இவ்விமானத்தில் சதிவேலை நடந்திருக்கலாம்,என்பதற்கான ஊகமாக விமானத்தில் எயர்கொண்டிசன் வேலை செய்யாமையும்; அதன் தொடர்பாக பயணிகளுக்கு விமானப் பயணச் சூழ்நிலை மனுதுக்கும் உடலுக்கும் ஒவ்வாததாக இருந்துள்ளமையை அவ்விமானத்தில் டெல்லியிலிருந்து அகமதபாத் வரை பயணம் செய்த பயணி ஒருவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
ஒரு குறிப்பிட்ட மணித்தியாலங்களின் பின் இயந்திரங்கள் நியமித்தலுக்குரிய தொழில்பாடுகளிலிருந்து தொழில்பயன் வேறுபடுவது இயந்திர உலகின் பொதுவிதி.
இப்பொதுவிதியின் வெளிப்பாட்டினை பாரிய தவறாக இயந்திரவியலாளர்களால் மாற்றியமைக்க முடியும்.

தொடர்ச்சியான வருவாயையம்,மக்களுக்கு அது மிக முக்கியமான தேவை எனக் கருதப்படும் ஒரு தயாரிப்பினை மெற்கொள்ளும் ஒரு தொழிற்சாலையின் மேற்குறிப்பிட்ட தயாரிப்பினைத் தயாரிக்கும் இயந்திரத்தை தயாரிப்பவர்கள்கூட தமது தயாரிப்பினால் அதனைப் பயன்படுத்தும் தொழிற்சாலைக்கு அவர்கள் தயாரிக்கும் தயாரிப்பு எந்தவிதவிதமான இடையூறும் இல்லாதவாறு தயாரிப்புகளைத் தொடர முடியும் என தொழிற்சாலைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டாலும் அந்த இயந்திரமும் பழுதடையும் சூழ்நிலை ஏற்படும்.

Air India Flight 171 Crash Information Vacuum Stokes Frustration, Rumors -  Bloomberg

அதுமட்டுமல்லாது அந்த இயந்திரத்தில்,இயந்திரம் இயங்கத் தொடங்கிய போது தயாரிப்பின் தரம் சார்ந்த நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கேற்றவாறு பொருளினைத் தயாரித்தாலும் அடுத்து வரும் மணித்தியாலங்களில் பொருளின் தரத்தில் வித்தியாசங்கள் எற்பட வாய்ப்புண்டு.
அதனாற்றான் எப்பொருளைத் தயாரிக்கின்ற தொழிற்சாலையாக இருந்தாலும் அரை மணித்தியாலத்துக்கு ஒருமுறையோ அல்லது ஒரு மணித்தியாலத்தக்கு ஒரு முறையோ தரக்கட்டுப்பாட்டுப் பிரிவினர் தயாரிப்பினைப் பரிசோதித்துக் கொண்டிருப்பர்.
இயந்திரவியலின் பிளஸ் அல்லது மைனஸ் விதிக்கேற்ப தயாரித்த பொருளின் தரத்தைக் கண்காணித்து நிர்ணயிக்கப்படு ம் அதே வேளை பிளஸ் என்பது உதாரணமாக ஒரு பியாரிங் தயாரிக்கடுமானால் அது ஒரு இரும்புத்தண்டில் சுற்றும் தொழிற்பாடைக் கொண்டிருக்குமானால் தண்டோடு அதன் இறுக்கம் அளவுக்கதினகமானால் சுற்றவதில் சிரமம் ஏற்படும்,அதே போல அளவுக்கு அதிகமான மைனஸ் நிலையனில் இந்த பியரிங் தண்டில் சுற்றம் போது தண்டுக்கும் பியரிங்குமிடையில் அதிகளவு இடைவெளி ஏற்பட்டு,அடுத்தடுத்த இயந்திரப் பொறிமுறை உறுப்புகளுக்கிடையில் வேறுபாடான தொழிற்சக்தி வெளிப்பட்டு இறுதியில் தயாரிக்கப்படும் பொருளின் தரம் பாதிக்கப்படும்.

ஒரு இயந்திரத்தில் ஆரம்ப இயல்பொறிமுறையிலிருந்து இறுதியாக பொருளின் உருவத்தை தயாரிக்குவரை,இயந்திரவியலாளர்கள்,பொறியியலாளர்கள்,திருத்துனர்கள் வரை மிகக் கவனம் எடுத்து பொறிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டேயிரப்பார்கள்.
இந்தகக் கூட்டு முயற்சியாளர்களினால் மேற்:கொள்ளப்படும் பணியில் நூற்றில் ஒரு பங்கு மில்லிமீற்றர் அளவில் கவனக்குறைவு ஏற்பட்டாலும் தயாரிக்கப்பட்ட பொருளில் பெரும் தரத்தவறு எற்பட வாயப்புண்டு.

பொருளின் தரம் மேலே குறிப்பிட்டது போல தொடர்ச்சியாக இயங்கும் இயந்திரவிசை ஒரே மாதிரியாக எப்பொழுதும் இருக்காது என்ற இயந்திரவியலின் பொதுவிதிக்கேற்ப ஏற்பட வாய்புண்டு, அதே வேளை பொறியிலாளர்,இயந்திரவியலாளர், மெக்கானிக் என்போராலும் பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

தமது தொழிற்சாலையின் தயாரிப்புத் தரம் குறைவாக இருந்து அது மக்களின் பாவனையை அதிகளவில் பெறமுடியாமலிருப்பின்,சதி எண்ணம் கொண்ட தொழிற்சாலை ஒரு மிகத்திறமை வாய்ந்த இயந்திரவியலாளருடன் தொடர்பு கொண்டு அவருக்குப் பெருந்தொகையான பணத்தைக் கொடுத்துத் தனக்குப் போட்டியான தொழிற்சாலையில்,அத்தொழிற்சாலையில் பொறுப்புக்கூறும் அதிகாரிகளை விலைக்கு வாங்கி தமக்குச் சாதகமானரை இயந்திரவியலாளரை பணிக்கமர்த்திவிடுவர்.

ஆனால்,ஒரு தொழிற்சாலை தயாரிக்கும் தயாரிப்புப் போலத் தயாரிக்கும் இன்னொரு போட்டித் தொழிற்சாலைக்குள்,நான் விபரித்திருப்பது பொல சதியை மேற்கொள்வது என்பது மிகச் சுலபமானது அல்ல,மிகவும் கடினமானது பலரின் கண்காணிப்பை மீறிச் செயல்படுதலாகும.;
ஏனெனில் புதிய இயந்திரவியலாளரின் சதிச் செயல்பாடு இது சதிச் செயல்பாடு அல்ல இயந்திரத்தின் இயல்பான பொதுவியங்கு நிலை என்பதை சதி செய்யவென்று வந்த இயந்திரவியலாளர் மிகவும் தர்க்க ரீதியாகச் சொல்வதை தொழிற்சாலை நிர்வாகம் நம்பும் விதத்தில் இயந்திரவியலாளர் சொல்லுவார்.

A small gray dot...': Aviation expert says this detail may unravel Air  India crash mystery - BusinessToday

தவறு ஏற்படுத்த வாய்ப்பே இல்லையென்ற விதத்தில் இயந்திரவியலின் இயற்பியல் சமன்பாடும்,கணிதவியல் சமன்பாடும் சரியாகும் தொழிற்பாட்டில்கூடத் தவறைச் செய்ய முடியும்.

பெருந்தொகையான பணத்திற்காக சதி செய்யும் சதியாள இயந்திரவியலாளர்கள்கூட அத்ததொழிலில் மிகச் சிறந்த கல்வியறிவு உடையவர்களாக இருப்பார்கள்.
இத்தகையவர்களை உளவு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.போட்டித் தொழிற்சாலைகளின் உற்பத்திகளில் தரக்குறைவை ஏற்படுத்திக் கொடுப்பதற்கென்றே நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிறுவனங்கள் பல்துறை நிபுணர்களைக் கொண்டவர்களாக இருப்பதுடன்,பல்துறை தொழில்பாடுகளைக் கொண்டவர்களுக்கு,அவரவர் தொழிற்பாடுகளை மேம்படுத்த ஆலோசனை அறிஞர்களைக் கொண்டிருப்பவர்களாக இருப்பதுடன்,அவர்களிடம் தொழிற்சாலைகளுக்கு தேவையான விசேட ஆற்றலுள்ள இயந்திரவியலாளர்களின் விபரங்களையும் வைத்திருப்பார்கள்.

இத்தகு வல்லாளர் அணுகுமுறை என்று சொல்லக்கூடிய வல்லாளர்களின் அணுகுமுறை நிறுவனங்களை தொழிற்சாலைகள் அணுகும் போது அந்நிறுவனம் இயந்திரவியல் வல்லாளர்களைப் பரிந்துரைக்கும்.

அவர்கள் தமது நிறுவனம் சொல்லும் சதியைஅல்லது ஊழலை எவருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு செய்து முடிப்பார்கள்.இத்தகு வல்லாளர்கள் மாதாந்தம் பெரும் தொகைச் சம்பளத்தைப் பெறுபவர்களாகவும்,ஒரு திட்டமிடலை எவ்வித குழப்பமுமில்லாமல் நிறைவேற்றிக் கொடுத்தமைக்காக பெருந்தொகைப் ஊக்கப் பணத்தை பெறுபவர்களாகவும் பல சலுகைகளைப் பெறுபவர்களாகவும் இருப்பார்கள்.

பொதுப்பார்வைக்கு தொழிற்சாலைகள் மட்டத்தில் அத்தகையவர்கள் சதியாளர்களாகத் தோன்றினாலும்.வல்லாளர்களைப்: பொறுத்தவரையில் அது அவர்களின் தொழிலாகும்.அவர்கள் அறிஞர்கள் என்றே அடையாளப்படுத்தப்படுவார்கள்.
இச்சதி அணுகுமுறை தொழிற்சாலைகள் மட்டத்தில் மட்டுமல்ல பல்வேறு மட்டங்களில் காணப்பட்ட போதும் முன்னரும் அண்மைக்காலமாகவும் பலரின் கவனத்தை ஈர்ந்த விடயமாகவும்உலகளவில் முக்கியமான பேசுபொருளாகி மக்கள் மத்தியிலும் அச்சு,இலத்திரனியல்,ஒலி ஒளி ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்தவையும்,வெளிவந்து கொண்டிருப்பது விமான விபத்துக்கள் சம்பந்தப்பட்டவையே.

அதற்குக் காரணம் விமான விபத்துக்கள் யாவும் மனித உயிர்களோடு சம்பந்தப்பட்டவையாக இருப்பதுமாகும்.

வுpமான நிறுவனங்களுக்கு மத்தியில்,விமானப் போக்குவரத்து என்பது வருவாயைத் தேடித் தருவதற்கு மிக மூல காரணமாக இருப்பது பயணிகளேயாகும்.
பயணி ஒருவர் தான் போகும் இடத்துக்குரிய விமானச் சேவையைத் தேர்ந்தெடுப்பதில் விமானத்தின் தரம்,உபசரிப்பு எவ்வித தங்குதடையின்:றி தனது இடத்துக்குப் போய்ச் Nசுருகின்ற உடல் உளம் சார்ந்த சுகமான அனுபவம்,தனக்கு ஏற்ற விலை என இவற்றினைக் கருத்திற் கொண்டே தனது பிரயாணத்திற்கான விமான சேவையைத் தேரந்தெடுக்கிறார்.
இந்த அடிப்படையில் விமானச் சேவை நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு பயணிகளுக்கான சேவையை வழங்குகின்றன,விமானப் போக்குவரத்தை ஆக்கிரமித்தும் வைத்திருக்கின்:றன.

அதே வேளை ஒரு நாட்டினுடைய குடிமக்களில் தமது பயணத்துக்கு அவர்கள் பயன்படுத்தும் விமான சேவை அவர்களுடைய நாட்டினதாக இருக்கும் போது அதுவும்,அந்நாட்டினது அல்லாத விமான சேவைகளுக்கு அது பெரும் சவாலாகும். இதே பார்வையுடன் அண்மையில் இந்தியா அகமதபாத்தில்,பயணிகள்,விமானமோட்டிகள்,பணியாளர்கள்,பொதுமக்கள் என கிட்டத்தட்ட 270 பேரின் உயிரைக் காவு கொண்ட எயர் இன்டியா விமான விபத்து மேற்சுட்டிக்காட்டிய பிரிவுக்குட்பட்டவையா என கவனிக்கும் ஆய்வு நிiலையில் உற்று நோக்கும் போது விமானச் சேவையிலீடுபட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் இச்சதி வேலையைச் செய்ய மிக மிக மிக அரிதான வாய்ப்பே இருக்கின்றது.

ஆனால்,அண்மையில் பகல்காமில் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாதிகளால் இந்துக்கள் என அடையாளப்படுத்தப்பட்;டு சுட்டுக் கொல்லப்பட்ட 26 பொதுமக்களின் மரணத்துக்கு காரணமான பாகிஸ்தான் தீவிரவாதத் தளத்தின் மீது இந்தியா மேற்கொண்ட இராணுவத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலும்கூட இவ்விமான விபத்துச் சதியை மேற்கொண்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்:றது,ஊகிக்கத் தோன்றுகின்றது,சந்தேகிக்கவும் தோன்றுகின்ற,அதுதான் உண்மையாகவும் இருக்கலாம்..
அதல்லாமல் பொதுச் சதியாளர்கள் இரு நாடுகளுக்குமிடையில்,அரசியல் பொருளாதார,சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதற்காகவும் இதனைச் செய்யவம் வாய்ப்பிருக்கின்றது.
என்னதான் வெளிப்பார்வைக்கு அயல்நாடுகள் எனவும் சமாதானம்,ஒற்றுமை என வெளிக் காட்டிக் கொண்டாலும்,பாகிஸ்தான் இந்தியா ஆகிய இருநாடுகளிடமும் நீறுபூத்த தணலாக உள்பகை எப்பொழுதும் கனன்று கொண்டிருக்கின்றது என்பதை நிராகரிக்கவும் முடியாது.
இவ்விமானம் அகமதாபாத்திலிருந்து இலண்டன் கெற்விக் விமான நிலையத்தை நோக்கிப் போவதற்கு முன்னர் டெல்லியிலிருந்து அகமதாபாத் சர்தாய் படேல் விமான நிலையத்துக்கு வந்தடைந்தது என்பதையம்,அவ்விமானத்தில் குளிர்காற்றுக் கருவி தொட்டு வேறு இலத்திரனியல் கருவிகளும் வேலை செய்யவில்லை என்பதை அதில் பயணம் செய்த ஒரு பயணி பதிவு செய்திருக்கிறார்.

Air India plane crash investigators find Boeing 787's 2nd "black box" as  search for cause continues - CBS News

அந்தப் பயணி கெற்விக் விமானநிலையம் வரை தனது பயணத்தை தொடர்ந்தாரா அல்லது அகமதாபாத் வரை மட்டுந்தான் அவர் பயணத்தை மேற்கொண்டாரா என்பதற்கான விபரம் எதுவுமில்லை.

ஆனால் விமானமோட்டிகளும் பயணிகளும்,டெல்லியில் இருந்தே தொடர்ந்தவர்கள் என்பதற்கு ஆதாரமாக,விமானமோட்டிகளும் பணியாளர்களும் வேறு வேறானவர்களெனில்,இவ்விமான விபத்துக்குப்பின்னர் அவர்களில் ஆகக்குறைந்தது ஒருவரிடமிருந்தாவது ஏதாவது அபிப்பராயம் அல்லது கருத்து வெளிப்பட்டிருக்கும்.

இருப்பினும்,விபத்தைச் சந்தித்த விமான நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் விபத்துச்சம்பந்தமாக கருத்துக்களைத் தெரிவிக்கக்கூடாது என்ற விதிக்குகிழ் அவர்களின் பணியிருக்குமாயின் அவர்களிடமிருந்து விமானவிபத்துச் சம்பந்தமான எந்தக் கருத்தையும் எதிர்பார்க்க முடியாது,அது அவர்களின் தவறுமல்ல.

விமான இயந்திரங்கள் அதிநவீனமாக வடிவமைக்கப்பட்டாலும் அவற்றின் தொடர்நிலைச் செயல்பாட்டில் தவறுகளும் பிழைகளும் ஏற்பட வாய்ப்ப்புண்டு. ஏனெனில்: பல்துறைசார் இயந்திரவியலில் காலத்துக்குக் காலம் முந்தியதைவிட அடுத்தது அதிநவீனமானது என்று முன்னிறுத்தித்: தயாரிக்கப்படும் இயந்திரங்களில்;கூடத் தொடர்நிலைச் செயல்பாட்டில் தளர்நிலை ஏற்படுவதைக் கண்டும்,பிழைகள் ஏற்படுவதைக் கண்டும் இயந்திரங்களை உருவாக்கும் நிறுவனங்கள் பிழைகள் ஏற்படாது என்றெண்ணி நூறு வீதம் உத்தரவாதம் எனச் சொல்லி இயந்திரங்களைத் தயாரிப்பதும்,அவையும் செயற்பாட்டில் தளர்வதும்,பிழைகள் ஏற்படுவதும் தொடர்கதையே.

அது போன்றதுதான் விமான இயந்திரங்களுமாகும்.இயந்திரங்களில் வேணுமென்ற பிழைகளை ஏற்படுத்தும் ஒருவர் ஒரு இயந்திரத்தின் முழுத் தொகுதியின் ஒவ்வொரு மில்லிமீற்றர் பரப்பளவிற்கான பாகங்களினதும்; விநாடிப் பொழுதுகளுக்கான நேர அளவினையும் அறிந்தவராக இருப்பார்.

விமான இயந்திரத்தின் தொழிற்பாட்டிற்கு என்னென்ன பாகங்கள் வழியாக செயல்சக்தி என்னென்ன பாகங்களைச் சென்றடைகின்றன என்பதை அறிந்து வைத்திருக்கும் ஒருவர்: எவரின் கவனத்திற்கும் உட்படாத அல்லது அது அதிமுக்கியமானதல்ல என தீர்மானித்த ஒரு பாகத்தைஈ உதாரணமாக ஒரு சிறிய ஆணியை தளர்வாக்கி விடுவதன்: மூலமோ நீக்கிவிடுவதன் மூலமோ அந்த இயந்திரத்தை பழுதடைய வைக்க முடியும்.

I thought I would die': Sole survivor from Air India plane crash speaks out  - ABC News

டெல்லியிலிருந்து புறப்பட்ட இந்தக் குறிப்பிட்ட விமானத்தின் இயந்திரத்தின் செயல்பாட்டினை சீர்;குலைக்க பராமரிப்பாளர்கள் ஊடாக விபத்துக்கான நிலையை உருவாக்க அதனால்உடனடித்; தாக்கம் எற்படாதவாறு,அவ்விமானத்தின் தொடர் பயணத்தின் போதுஅவ்விமானம் விபத்துக்குள்ளாகும் வகையில் எவராலுமே சிந்திக்க முடியாத வகையில் பிழைகளை ஏற்படுத்தி இருக்கலாம்.

எரிபொருளின் மூலம் இயங்கும் ஒரு இயந்திரத்திற்கு எரிபொருள் சென்றடையும் ஊடகப் பாதையின் நீளம்,அதன் விட்டம் போன்றவற்றில் தங்கி நிற்கும் எரிபொருள் இயந்திரத்தை எவ்வளவு நேரத்துக்கு இயங்க வைக்க முடியும் என்பதையும்,இவ்விபத்து சதிமூலம் நடந்தது என்ற முடிவுக்கு வரும் பட்சத்தில் இச்சதியைச் செய்ய இயந்திரவியல் விற்பன்னர்களால் மட்டுமே இது முடியும்.

Ahmedabad Plane Crash: 10 most tragic air disasters in Indian history after Air  India flight disaster | Zee Business

இது சதியாயின்:,இது ஒரு நாட்டினுடைய உளவுநிறுவனத்தின் துணையுடனேதான் இது நடந்திருக்கலாம்.உலகநாடுகளின் வல்லமை பொருந்திய உளவு நிறுவனங்கள் யாவும் அறிவியல் களஞ்சியமாகவும் விஞ்ஞானிகளால் நிரம்பிய நிறுவனமாகவும் இருக்கின்றன.
இச்சதி யாரால் எந்நோக்கத்திற்காகச் செய்யப்பட்டது என்பதை கண்டுபிடித்து தீர்க்கமாக முடிவெடுக்க நீண்ட நாட்களாகலாம்.

அகமதபாத் விமான நியைத்தில்,விமான இயந்திரவியலாளரின்,பொறியியலாளரின் சதியா அதற்கு உயிர் தப்பியவரும் அதற்கு உடந்தையா அல்லது அசண்டையீனமா அல்லது விமானிகளின் தவறா என்பதை கறுப்புப்பெட்டி காட்டிக் கொடுத்தாலும்,எவர் பாதித்தாலும் பரவாயில்லை,விமான விபத்துக்கான சரியான காரத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது சந்தேகமே.

(தொடரும்…)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *