உலகம்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு சர்வதேச அணுசக்தி நிறுவனம் வலியுறுத்தல்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு சர்வதேச அணுசக்தி நிறுவனம் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவில்லை என்பதை உறுதி செய்ய முடியும் எனவும் சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அணுசக்தி நிலையங்களைத் தாக்குவது பேரழிவிற்கு வழிவகுக்கும் என சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர்
ரஃபேல் குரோசி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஃபோர்டோ மற்றும் எஸ்பஹான் அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், புஷேர் அணுமின் நிலையம் தாக்கப்பட்டால் மிக அதிக கதிர்வீச்சு வெளியேறும் என்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் அவர் கூறியுள்ளார். இது பல நூறு கிலோமீற்றர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள், அணுசக்தி பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை கடுமையாக பாதித்துள்ளன. இதுவரை பொதுமக்களை பாதிக்கும் கதிர்வீச்சு கசிவு ஏற்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் நிகழும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *