பலதும் பத்தும்

20 ஆண்டுகள் கோமாவில் இருந்து விழித்தாரா சவுதி இளவரசர்?

தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் சவுதி இளவரசர்களில் ஒருவரான அல் வலீத் பின் காலித் பின் தலால் கோமாவில் இருந்து வெளிவந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அதன் உண்மை தன்மை குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தின் போது பலத்த காயம் அடைந்த சவுதி இளவரசர்களில் ஒருவரான அல் வலித் பின் காலித் கோமா நிலைக்கு சென்றார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் கோமாவில் இருந்து வருவதால் அவரை தூங்கும் இளவரசர் என்று அழைக்கிறார்கள்.

இந்த நிலையில் அவர் கோமாவில் இருந்து எழுந்து விட்டதாக வீடியோக்கள் பரவின. ஆனால் அந்த வீடியோவில் இருப்பது சவுதி இளவரசர் அல்ல என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவில் இருப்பது சவுதி அரேபியாவின் பிரபல வர்த்தகர்களில் ஒருவரும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரருமான யஜீத் முகமது அல் ராஜி என தெரிய வந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button