முச்சந்தி

பேருந்தும் கொள்கலன் லொறியும் மோதி கோர விபத்து!

இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியின் எஹெலியகொட, மீன்னான பகுதியில் பேருந்தும் கொள்கலன் லொறியும் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (18) காலை இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தைத் தொடர்ந்து கொழும்பு-இரத்தினபுரி பிரதான வீதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்தில் காயமடைந்த சுமார் 18 பேர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலைமை மோசமாக இல்லை.

மேலும் விபத்து குறித்து எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button