பலதும் பத்தும்

ஜெட் விமானங்கள் பறக்கும்போது கோடுகளாக தெரிவது புகை அல்ல

ஜெட் விமானங்கள் வானில் பறக்கும்போது வெள்ளை நிற புகை கோடுகள் போல் காட்சியளிக்கும்.

வானில் வெள்ளை கோடுகள்

இதனை நாம் பார்க்கும்போது விமானங்கள் வெளியிடும் புகை என்றுதான் நாம் நினைத்திருப்போம்.

jet plane ஆனால், உண்மையில் அது புகை இல்லை என்பதுதான் ஆச்சரியமான விடயம். வானில் வெள்ளை கோடுகள் தென்படுவதை பார்க்கும்போது ஜெட் விமானங்கள் கடந்து சென்றதை நாம் அறிந்து கொள்வோம்.

பல சந்தர்ப்பங்களில் ஜெட் விமானங்கள் பறக்கும்போது பின்னால் இந்த வெள்ளை கோடுகள் உருவாகும்.

உண்மை

உண்மையில், விமானத்தில் இருந்து புகை வெளியாவது கிடையாது. ஜெட் போன்ற அதிவேக எஞ்சின் கொண்ட விமானங்களில் இருந்து நீராவி வெளியேற்றப்படுகிறது.

இந்த நீராவி வானில் குளிர்ந்த காற்றுடன் கலந்து, பனித்துளியாக மாறுவதால் நமக்கு வெள்ளை கோடுகளாக காட்சியளிக்கின்றன.

அதாவது, பூமியில் இருந்து பல்லாயிரம் அடி உயரத்தில் குளிர்ந்த சூழல் நிலவும். இதில் ஜெட் விமானத்தின் சூடான நீராவி உறைந்து போகிறது.

இதுவே நாம் கீழே இருந்து பார்க்கும்போது ஜெட் விமானங்கள் புகையை வெளியிடுவதுபோல், அவை கோடுகளாக நம் கண்களுக்கு தெரிகின்றன.

jet plane

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button