பலதும் பத்தும்

தங்க கழிப்பறையை களவாடிய கில்லாடிகள்! 5 வருடங்களின் பின் மாட்டியதால் நடந்த சம்பவம்!

ப்ளென்ஹெய்ம் அரண்மனையில் நடந்த ஒரு கலை கண்காட்சியில் இருந்து £4.8 மில்லியன் பெறுமதியான  தங்க கழிப்பறையைத் திருடியதற்காக இரண்டு ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2019 செப்டம்பரில் ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள வீட்டில் நடந்த ஒரு கண்காட்சி விழாவிற்குப் பிறகு, திருடர்கள் உள்ளே நுழைந்து, 18 கரட், திடமான தங்க கழிப்பறையை உடைத்துச்  சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடந்து வந்தன

இந்நிலையில் 40 வயதான ஜேம்ஸ் ‘ஜிம்மி’ ஷீன், 2024 இல்  மேற்குறித்த திருட்டு வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதே நேரம்  39 வயதான மைக்கேல் ஜோன்ஸ், கடந்த மார்ச் மாதம் குறித்த திருட்டு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஆக்ஸ்போர்டைச் சேர்ந்த ,இருவருக்கும் முறையே நான்கு ஆண்டுகள் மற்றும்  இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button