பலதும் பத்தும்

இந்த வருடம் கௌதம் அதானி வாங்கிய சம்பளம் எவ்வளவு?

இந்தியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வரரான கௌதம் அதானி மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் மொத்த ஊதியமாக ரூ10.41 கோடி பெற்றுள்ளார்.

இது பெரும்பாலான அவரது தொழில்துறை சகாக்கள் மற்றும் அவரது சொந்த நிறுவனங்களின் முதன்மையான நிர்வாகிகளை விடக் குறைவு என்றே கூறப்படுகிறது.

அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 9 நிறுவனங்களில் இரண்டில் இருந்து மட்டும் அதானி சம்பளம் பெறுகிறார். தற்போது அவர் வாங்கியுள்ள மொத்த ஊதியம் முந்தைய 2023-24 நிதியாண்டில் அவர் பெற்ற ரூ 9.26 கோடியை விட 12 சதவீதம் அதிகமாகும்.

அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) நிறுவனத்திடமிருந்து 2024-25 ஆம் ஆண்டிற்கான அவரது ஊதியத்தில் ரூ 2.26 கோடி சம்பளமும், ரூ 28 லட்சத்திற்கும் அதிகமான சலுகைகள், கொடுப்பனவுகள் மற்றும் பிற சலுகைகளும் அடங்கும்.

AEL நிறுவனத்திடம் இருந்து அதானி பெற்றுள்ள சம்பளம் ரூ 2.54 கோடியாக இருந்தது, இது முந்தைய நிதியாண்டில் ரூ 2.46 கோடி என இருந்தது. மேலும், அவர் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்திலிருந்து (APSEZ) ரூ 7.87 கோடி சம்பளமாகப் பெற்றார்.

அதில் ரூ 1.8 கோடி சம்பளம் மற்றும் ரூ 6.07 கோடி கமிஷன் என்றே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து பெரிய குடும்பத்திற்குச் சொந்தமான கூட்டு நிறுவனங்களின் தலைவர்களை விட அதானியின் சம்பளம் குறைவு.

கோவிட் பரவியதிலிருந்து இதுவரை முகேஷ் அம்பானி தனது முழு சம்பளத்தையும் விட்டுக்கொடுத்து வருகிறார், அதற்கு முன்பு அவர் தனது சம்பளத்தை ரூ 15 கோடியாகக் குறைத்திருந்தார்.

2023-24 ஆண்டில் Sunil Bharti Mittal தனது சம்பளமாக ரூ 32.27 கோடி பெற்றுள்ளார். Rajiv Bajaj தமது சம்பளமாக ரூ 53.75 கோடி பெற்றுள்ளார். Pawan Munjal தனது சம்பளமாக ரூ 109 கோடியும், L&T தலைவர் எஸ் என் சுப்பிரமணியன் ரூ 76.25 கோடியும்,

இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் எஸ் பரேக் ரூ 80.62 கோடியும் சம்பளமாக வாங்கியுள்ளனர். மட்டுமின்றி, மற்ற தொழிலதிபர்களைப் போலவே, அதானியும் குழும நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் வருவாய்க்கு செலுத்தக்கூடிய ஈவுத்தொகையிலிருந்து சம்பாதிக்கிறார்.

அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினய் பிரகாஷ் ரூ 69.34 கோடி சம்பளமாக வாங்குகிறார். அதானியின் AGEL நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினீத் எஸ் ஜெய்ன் ரூ11.23 கோடி சம்பளம் வாங்குகிறார்.

AGEL நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜூகேஷிந்தர் சிங் ரூ10.4 கோடி சம்பளம் பெறுகிறார். அதானியின் APSEZ நிறுவனத்தில் பணியாற்றும் அவரது மகன் கரண் ரூ 7.09 கோடி சம்பளம் வாங்குகிறார்.

அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்வனி குப்தா ரூ 10.34 கோடி சம்பளம் பெறுகிறார். ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 82.5 பில்லியன் டொலர் என்றே தெரிய வந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button