உலகில் தலைநகரம் இல்லாத ஒரே நாடு எது தெரியுமா?

உலகில் தலைநகரம் இல்லாமல் இயங்கும் ஒரே நாடு எது என்பதை இங்கே காணலாம்.
பூமியின் பல்வேறு நாடுகள் வெவ்வேறு தனித்தன்மைகளால் புகழ்பெற்றவை. ஆனால், உலகில் ஒரு தனிப்பட்ட நாடு உள்ளது – இதற்கு தலைநகரம் என்று ஒன்று இல்லவே இல்லை.
இந்த நாடு நவுரு (Nauru) என அழைக்கப்படுகிறது. இது தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள மைக்ரோனேசியா பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவுக் குடியரசாகும்.
சுமார் 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் நவுரு தான், உலகில் தலைநகரம் இல்லாத ஒரே குடியரசு நாடாகும்.
அதுமட்டுமின்றி, வத்திக்கான் மற்றும் மொனாகோவிற்கு பிறகு உலகின் மூன்றாவது சிறிய நாடும் இது தான்.
இங்கு முக்கிய நகரமாக யாரென் (Yaren) உள்ளது, ஆனால் இதுவே நிரந்தர தலைநகராக அறிவிக்கப்படவில்லை. அரசு அலுவலகங்கள் யாரெனில் உள்ளன என்பதால் இது நிர்வாக மையமாக கருதப்படுகிறது.
நவுருவின் சிறப்பம்சங்கள்:
மிகவும் குறைவான மக்கள்தொகை (சுமார் 12,000)
தேசிய கரன்சி: அவுஸ்திரேலிய டொலர்
வரலாற்றில் 12 பழங்குடிகள் வாழ்ந்ததற்கான குறியீடுகள் நாட்டின் கொடியில் இடம்பெற்றுள்ளன
கடந்த காலங்களில் பாஸ்பேட் சுரங்கம் முக்கிய வருமானமாக இருந்தது
தற்போது தேங்காய் உற்பத்தி மற்றும் சுற்றுலா வருமான மூலமாக உள்ளன
ஓலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கிறது
வெண்சரிவு கடற்கரை, முத்துப்பாறைகள், இயற்கை அழகு மற்றும் அமைதி சுற்றுலா பயணிகளை கவர்கின்றன.
நவரு என்பது உலக நாடுகளில் தனித்துவமான இடம் பெற்றுள்ள முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும்.
தலைநகரமின்றி இயங்கும் ஒரே நாடு என்ற வகையில் இது உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.
![]()