பலதும் பத்தும்

தவெக சார்பில் 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா தொடக்கம்

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

கல்வி விருது விழா

கடந்த 30ஆம் திகதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் பரிசுகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து, இன்று 2ஆம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

இன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கிய நிகழ்ச்சியில் தமிழக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.

தவெக சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா தொடக்கம் | Tvk Vijay Education Award Started

அதன்படி, இன்று 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், ஊக்கத்தொகையையும் விஜய் வழங்க உள்ளார்.

நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்த தவெக தலைவர் விஜய்க்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் மற்றும் பரிசை விஜய் வழங்கி வருகிறார்.   

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button