உலகம்

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஈரானுக்கு அமெரிக்கா நெருக்கடி!

அமெரிக்க நிர்வாகம், ஈரானுக்கு அனுப்பி வைத்துள்ள அணு சக்தி ஒப்பந்த முன்மொழிவுகளில் ஈரானை உடனடியாக கையெழுத்திடுமாறு அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது.

ஈரானிடம் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான யுரேனியம் அதிகளவில் உள்ளதால் இது பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதனால் ஈரானுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்ய ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

இதேவேளை, அணு ஆயுதங்களை தயாரிக்கக் கூடாது என்றும் ஈரானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் , அமெரிக்காவின் புதிய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஈரானுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார் .

இதன் பிண்ணனியிலேயே , அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்திற்கான முன்மொழிவை அமெரிக்கா ஈரானுக்கு அனுப்பியுள்ளதோடு உடனடியாக அதில் கையெழுத்திடும்படி நெருக்கடி கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *