பலதும் பத்தும்

இரவு 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குறீங்களா?; மிகவும் ஆபத்து உஷார்

இரவில் 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதால் ஏற்படும் ஆபத்து குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் இரவில் மிகவும் தாமதமாகவே தூங்குகின்றனர். இன்னும் சிலர் இரவில் விழித்துக் கொண்டிருந்து பகலில் தூங்கும் வழக்கத்தினை வைத்துள்ளனர்.

ஆனால் உண்மையிலேயே இரவில் தூங்குவது தான் மிகவும் சிறந்ததாகும். தற்போது மக்கள் அதிகமான வேலைப்பளு காரணமாக தூக்கத்தின் நேரத்தினை குறைத்துக் கொண்டு வருகின்றனர்.

ஆரோக்கியமான உணவு, தூக்கம் இவை மனிதர்களுக்கு மிக மிக முக்கியம் ஆகும். ஆனாலும ்பரபரப்பான வாழ்க்கை முறையால் தூங்காமல் இருப்பது உடலில் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

சிலர் நாள் ஒன்றிற்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகின்றனர். இவ்வாறான பழக்கத்தில் உள்ளவர்கள் கடுமையான உடல்பாதிப்பினை சந்திப்பார்களாம்.

இரவு 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குறீங்களா? மிகவும் ஆபத்து உஷார் | Sleeping Less Than 5 Hours A Day Health Risk

தூக்கம் குறைந்த ஏற்படும் பிரச்சனை என்ன?

ஆய்வு ஒன்றில், ஆண்கள் சரியாக தூங்காமல் இருந்தால் அவர்களுக்கு டெஸ்டோஸ்டிரேன் அளவு குறையும் அபாயம் உள்ளதாம். மேலும் இந்த ஹார்மோன் உடலின் வலிமை, ஆற்றல் மற்றும் தசைவளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் உடல் செயல்திறன் பாதிப்பு ஏற்படுகின்றது.

இரவு 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குறீங்களா? மிகவும் ஆபத்து உஷார் | Sleeping Less Than 5 Hours A Day Health Risk

தூக்கமின்மையானது உடற்பயிற்சிக்கு பின்பு தசைகள் மீண்டுவரும் செயல்முறையை மெதுவாக்குமாம். எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் போதுமான தூக்கம் இருக்காது. உடலில் செல்களை புதுப்பித்தல் செயல்முறையும் தூக்கத்தின் போதே நடைபெறுகின்றது.

தூக்கமின்மை மேலும் இன்சுலின் உற்பத்தியினைக் குறைத்து ரத்த சர்க்கரை அளவை பாதிக்கின்றது. நீண்டகால உயர் ரத்த சர்க்கரைக்கு வழிவகுக்குமாம். மேலும் நாம் உட்கொண்ட உணவில் உள்ள குளுக்கோஸையும் உடலால் சரியாக பயன்படுத்த முடியாதாம். நாளடைவில் நீரிழிவு நோய் பிரச்சனையை ஏற்படுத்துகின்றது. 

இரவு 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குறீங்களா? மிகவும் ஆபத்து உஷார் | Sleeping Less Than 5 Hours A Day Health Risk

அதே போன்று தூக்கமின்மையால் பசி அதிகமாவதுடன், உடல் எடையும் அதிகரிக்கும். நாள் ஒன்றிற்கு 300 முதல் 400 கலோரிகள் வரை உணவு உட்கொள்ள நேரிடும். ஆதலால் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் தினமும் குறைந்தது 7 முதல் 8 மணி நேர தரமான தூக்கத்தினை கட்டாயம் வழக்கமாக்கிக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.

இரவு 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குறீங்களா? மிகவும் ஆபத்து உஷார் | Sleeping Less Than 5 Hours A Day Health Risk

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *