5 வகை போக்குவரத்து விதிமீறல் மட்டுமில்லை

இந்தியாவில் சென்னையில் ஹெல்மெட் அணியாதது, வேகமாக வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்குமாறு போக்குவரத்து பொலிஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வழக்குகளை போக்குவரத்து பொலிஸார் பதிவு செய்து வருகின்றனர். சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து சலான் அனுப்பப்பட்டு வருகிறது.
25 வகையான போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில்,
போக்குவரத்து பொலிஸார் கும்பலாக நின்று துரத்தி பிடிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் விபத்து உயிரிழப்புகள் ஏற்பட காரணமான விதிமீறல்களுக்கு அபராதம் விதித்தால் போதுமானது என போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஒருவழிப்பாதையில் வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும், இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தல் ஆகிய 5 விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
மேலும் தேவைப்பட்டால் மற்ற விதிமீறல்களுக்கு வழக்குப் பதிவு செய்யலாம் எனவும், பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் போக்குவரத்து பொலிஸார் நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
![]()