வாசல் கதவு… கவிதை… முல்லைஅமுதன்

வாசல் கதவு என்றும் திறந்திருக்கும்.
வாசலில் எப்போதும்
அப்பாச்சி குந்திருந்து
பாக்குரலில் இடித்தபடி…
வாய் எச்சில் ஊறியபடி ஊர்க்கதைகள் பேசுவாள்.
அம்மா வீட்டு வேலை முடிய..
தங்கைகளுக்கு தலைசீவிக்கொண்டிருப்பாள்.
அப்பா முற்றத்தில் தன் சைக்கிளை
நிறுத்திவிட்டு,
வாசலில் குந்துவார்.
தங்கை கொடுத்த தேநீரைச் சுவைத்தபடி..
வீதியால் போகும் மணியம் மாமாவிற்கு பதிலளிப்பார்.
அயல் வீட்டுச் சிறுமிகள்
முற்றத்தில் நாவல் பழங்களைப் பொறுக்குவர்..
அம்மாவிற்கும் அப்பாச்சிக்கும் என்றும்
சண்டை வந்ததில்லை..
இப்போது..
நூற்றாண்டின் அதிசயம்..அல்லதுஅதிர்ச்சி…
வாசல் பூட்டப்பட்டே இருக்குறது..
அப்பாச்சி இல்லை…
யாரும் குந்தியிருப்பதில் அச்சம்
இருப்பாதாக அக்காள் சொல்வாள்.
கோழிகள் வீட்டுக்குள் உலாவருவதும் குறைந்துபோயிற்று..
அப்பாவின் இறுதி ஊர்வலத்தின் போதே
கடைசியாக பூட்டப்பட்டது..
சப்பாத்துக்கால்கள் எப்போதும் வரலாம்.
வாசல கதவு பூட்டப்ப்ட்டௌ..
பின்கதவையே பயன்படுத்த பழகிக்கொண்டார்கள்.
அக்காவின் முகம் கூதூகலம் மறைந்து நாளாயிற்று.
கதவு தட்டப்பட்டால் அதிர்ந்து போகிறாள் அக்கா..
![]()