முகநூல்
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு அல்லவா?

சென்ற மாத நடுப்பகுதியில் கடுமையான காய்ச்சல் தீவிரமாகப் பரவிய நாளொன்றில் நான் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் நோளியாகி இருந்தேன்.
எனது விடுதியில் 70 பேர் தான் கட்டிலில் தங்க முடியுமென்ற நிலை.
ஆனால் அதனைக் கடந்த எண்ணிக்கை நோயாளிகள்.
ஒரு நாள் 03 நோயாளிகள் வந்திருந்தனர். ஆனால் கட்டில் கொடுக்க முடியாத நிலை.
அதனால் 03 நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை.
ஆனால் அந்த நோயாளிக்குத் துணையாக வந்தவர் பொறுமையின்றி நான் டொக்ரர் அர்ச்சுனாவுக்கு அறிவிக்கப் போறன் அவர் சொன்னது சரிதான் எனச் சத்தமிட்டனர். கட்டிலுக்குக் காத்திருந்த ஏனைய இரு நோயாளியுடன் வந்தவர்களும் கோரஸ் பாடினார்கள்.
டொக்ரர் மார் என்ன செய்வதென்று பரபரப்படைந்தனர்.
நானாக முன்வந்து எனது நிலை முன்னேற்றம் அதனால் எனது கட்டிலைத் தருகிறேன். என முன்வந்தேன். வாங்கிலில் போய் இருந்து கொண்டேன்.
என்னைப் பார்த்து மேலும் இருவர் கட்டிலைக் கொடுக்க முன்வந்தனர். பிரச்சினை முடிந்தது.
மாலைப்பட்டதும் டொக்ரர் அர்ச்சுனாவை இழுத்துக் கத்திய ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
கட்டிலை வைத்துக் கொண்டு டொக்ரர்மார் உங்களைக் கவனிக்காமல் விட்டார்களா ?
இல்லை என்றார்.
அர்ச்சுனாவின் பெயரைச் சொல்லி பிளாக்மெயில் பண்ணுகிறீர்களே . அவர் கூறியது போல இருந்தால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் எல்லோருமே பிணமாகப் போக வேண்டும் அல்லவா ? என்றேன்.
அவ்வாறு இல்லை என்றார்.
நாட்டின் உயர்தர மருத்துவம் இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த மருத்துவ ஆளணியினரை மதியுங்கள். அவர்களது இரவு பகல் சேவைக்கு நன்றி கூறுங்கள்.
அர்ச்சுனா வெறுமனே புள்ளிவிபரங்களை எடுத்து விட்டுப் பிரபல்யம் தேடுகின்றார்.
ஆயிரத்தில் ஒரு பிழை நடக்கலாம்.
நாட்டில் 50 இலட்சம் மோட்டார் சைக்கிள்கள் நாளாந்தம் வீதியில் ஓடுகின்றன. அதில் ஒரு 100 மோட்டார் சைக்கிள்கள் நாளாந்தம் விபத்துக்கு உள்ளாகின்றன.
அது போலத் தான் சகலதுறைகளும் என்றேன்.
நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலுடன் அர்ச்சுனா குறித்த மாயத்திரை விலகி விட்டது.
அவரது வடக்கு மாகாண முதலமைச்சரும் அம்போ தான். வெறுமனே பரபரப்பூட்டிக் கனநாளைக்குப் பிழைப்பு நடத்த முடியாது.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு அல்லவா?
வேதநாயகம் தபேந்திரன்
![]()