வெறும் 10 நிமிட பயணம்; இந்தியாவின் மிகக் குறுகிய ரயில் பாதை எது?

மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூருக்கும் அஜ்னிக்கும் இடையிலான ரயில் பாதை இந்தியாவிலேயே குறைந்த தூரம் கொண்ட ரயில் பாதையாகும்.
இரண்டுக்கும் இடையே உள்ள தூரம் வெறும் 3கிமீ மட்டும்தான். இதனை வெறும் 9 நிமிடத்தில் கடந்து செல்லலாம்.
இந்தியாவின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான நாக்பூர் சந்திப்புக்கும், புறநகர் அஜ்னி நிலையத்திற்கும் முக்கிய இணைப்பாக இந்தப் பாதை உள்ளது.

இவ்வழித்தடத்தில் விதர்பா எக்ஸ்பிரஸ், சேவாகிராம் எக்ஸ்பிரஸ், மகாராஷ்டிரா எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த வழித்தடத்தில் பயணிப்பதற்கான கட்டணம் 3கிமீ தூரத்திற்கு 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இருப்பினும், இரண்டாவது ஏசி பெட்டிக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும், அசாமில் உள்ள திப்ருகரில் இருந்து தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வரை மிக நீளமான ரயில் பாதை உள்ளது.
இந்த 4218.6 கிமீ பயணம் 74 மணி 35 நிமிடங்களில் நிறைவடைகிறது. இந்த ரயில் இந்தியாவின் 8 மாநிலங்கள் வழியாக இந்த ரயில் செல்கிறது.
![]()