முச்சந்தி

கொத்மலையில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயம்

கொத்மலை, ரம்பொட பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

ராஜாங்கனை பகுதியில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிய போதே வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வேன் வீதியை விட்டு விலகி மண் மேட்டுடன் மோதியுள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் சந்தேகிக்கப்படுகின்றது.

காயமடைந்த 17 பேரும் சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button