Uncategorized

500Kg எடையுள்ள சோவியத் விண்கலம் இன்று பூமிக்குத் தாக்கம்!

இது கடலில் விழுந்தால் பெரிதாக தாக்கம் இல்லை ஆனால் தரையில் விழுந்தால்!!!

1972 மார்ச் 31 அன்று சோவியத் யூனியன் வெள்ளி கிரக ஆராய்ச்சிக்காக அனுப்பிய விண்கலம், 53 வருடங்களுக்கு பிறகு இன்று சனிக்கிழமை (மே 10) பூமியில் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயலிழந்து விட்டு நீண்டகாலமாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் அநாதரவாக சுழன்றுவந்த இவ் விண்கலம், தற்போது பூமியின் ஈர்ப்புப் புலத்தில் சிக்கியுள்ளதால் வேகமாக விழுகின்றது.

சுமார் 500Kg எடை கொண்ட விண்கலம் மணிக்கு 242 கிமீ என்ற வேகத்தில் வருமாம். இது ஒரு ஏவுகணையை ஒத்த தாக்கம் ஏற்படுத்துமாம்.

விழும் இடம் மற்றும் நேரம்: உறுதி செய்ய முடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விழும் நேரத்தில் புவியில் எங்கு தாக்கம் ஏற்படும் என்பது தற்போது வரை கணிக்க முடியாத நிலைமையில் உள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *