முகநூல்

மோடி ஜீயின் தப்பு கணக்கு!

மோடி ஜீயின் தப்பு கணக்கு. பாக்கிஸ்தான் பொருளாதார ரீதியாக பின்னடைந்துள்ளது. அதனால் எங்கள் புலனாய்வு பிரிவு வகுத்த திட்டத்தை நடை முறை படுத்தி நம்ம ஊருல ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தி அதன் மூலம் பாகிஸ்தானை நோண்டி ஆட்டம் காண வைத்து விடலாம் என்று போட்ட தப்பு கணக்கு இது.
தாங்கள் புதிதாக பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கிய ரஃபேல் போர் விமான தாக்குதல் திறன் மற்றும் தங்கள் விமானம் தாங்கி கப்பல்களின் உச்சக்கட்ட நம்பிக்கை. மற்றும் பிரமோஸ், அக்னி ஏவுகணைகளின் நீண்ட தூர வீச்சு. படைப்பலம் எல்லாவற்றையும் வைத்து பாகிஸ்தான் மீது தாக்கி ஓடவிடுவதோடு சீனாவுக்கு பயம் காட்ட நினைத்த இந்திய கொள்கை வகுப்பாளர்கள் போட்ட தப்புக்கணக்கு. உண்மையில் நீண்ட போர் ஒன்று உருவாகினால் இந்தியா தாக்கு பிடிக்க முடியாமல் தள்ளாடும் அதுவே உண்மை.
ஒரு நாளில் ஐந்து போர் விமானங்களை இந்தியா இழந்துள்ளது அதில் நாலாம் தலை முறை ரஃபேல் போர் விமானம், இரண்டு இறஸ்சிய சுக்கோய் போர் விமானங்கள் அடங்கலாக. எல்லாவற்றுக்கும் சாட்சி இந்த இந்திய போர் விமானி.
கார்கில் போரை யாரும் இலகுவில் மறந்து விட முடியாது. அப்போது இருந்த ஆயுத வீச்சு, யுத்த முறைகள் இப்போது வேறு ஒரு பரிணாமத்துக்குள் நுழைந்து உள்ளது. ஆட்லறி தூர வீச்சு, விமான குண்டு வீச்சு என்ற யுத்த முறை மாறி எதிரி எல்லைக்குள் விமானம் பறக்காமலே 300 கிலோ மீற்றர் தொலைவில் தங்கள் நாட்டு வான் பரப்பில் பறந்தவாறே விமானங்கள் வழிகாட்டி ஏவுகணை மூலம் எதிரி இலக்கை தாக்கும் காலம் இப்போது. அதைவிட நிலத்தில் இருந்து ஏவிவிடக்கூடிய நீண்ட தூர ஏவுகணை அமைப்புகள். அதைவிட கூட்டம் கூட்டமாக வரும் ட்ரோன்கள் இப்படி ஏராளமான போரியல் மாற்றம்.
ஒரு போதும் நாங்கள் எதிரி என கருதுபவன் எங்களைவிட பல வீனமானவனாக இருப்பான் என்று கணக்கு போடக்கூடாது.
இந்தியாவின் படைப்பலம் மறுக்கப்படக்கூடியது அல்ல. அதற்காக பாகிஸ்தானும் சளைத்தவர்கள் அல்ல. ஏனெனில் இந்த விமானங்களை சுட்டு வீழ்த்தும் அளவிற்கு பாகிஸ்தான் விமானப்படை வளர்ச்சி உள்ளது. அதுவும் மேற்குலகம் இதுவரை கேலியும் கிண்டலுமாக பார்த்த சீனத்தயாரிப்பு J-17 மேம்படுத்தப்பட்ட விமானங்களே இந்த பணியை செய்துள்ளன.
பாகிஸ்தான் மீது ஒரு தாக்குதலை நடத்துவதற்கு இஸ்ரேலும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பின்னால் உள்ளனர். பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா ஏவிய ட்ரோன்கள் இஸ்ரேலிய தயாரிப்பானவை.இதேசமயம் பாகிஸ்தானும் துருக்கி தயாரிப்பான ட்ரோன்களை இன்று ஏராளமாக ஏவியுள்ளன.
பாகிஸ்தான் நாட்டிடம் அமெரிக்க தயாரிப்பான F-16 போர் விமானங்கள் உள்ளன. ஆனால் அவை இனிமேல் பயன்படுத்த முடியுமா என்பது கேள்வி ❓ காரணம் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் மறைந்து இருந்த பின்னர் அமெரிக்க சீல் படையினரால் பாகிஸ்தானில் வைத்து கொல்லப்பட்ட பின்னர் அமெரிக்க பாகிஸ்தான் நட்புறவு சீர் கெட்டு விட்டது. தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாகவே பார்க்கிறார். இதன் காரணமாக F-16 போர்விமானங்களுக்கு உதிரி பாகங்கள் கிடைப்பதில் பெரும் நடை முறை சிக்கல்கள் உள்ளன.
சீனா இந்த இந்தோ பாகிஸ்தான் யுத்தத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளும். தனக்கு எதிராக இந்தியா உச்சக்கட்ட வளர்ச்சிப்பாதையில் செல்வதை விரும்பவில்லை. இந்த யுத்தம் நீண்டால் சீனா நிச்சயமாக பாகிஸ்தானுக்கு தேவையான யுத்த விமானங்கள், ஏவுகணைகள் சகலத்தையும் வழங்கி இந்திய பொருளாதார இலக்குகளை தாக்க வைக்கும். பாகிஸ்தானை சீனா ஒரு கருவியாக பயன்படுத்திக்கொள்ளும்.
இந்த யுத்தம் நீளுமாக இருந்தால் அம்பாந்தோட்டை துறைமுகம் கூட இந்தியாவால் தாக்கப்படலாம் காரணம் சீனா ஒப்பந்தம் மூலம் கையகப்படுத்தியுள்ள அம்பாந்தோட்டை துறை முகத்தில் இந்து சமுத்திரத்தை கண்காணிப்பு செய்யும் நீண்ட கடல் கண்காணிப்பு கருவிகள் உள்ளன. அதன் மூலம் தகவல்களை பெற்று சீனா பாகிஸ்தானுக்கு தகவல்களை வழங்கலாம் என்று இந்திய உளவுத்துறையின் கணிப்பு.
இப்படி நடக்குமாக இருந்தால் இந்தோ பாகிஸ்தான் யுத்தம் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்துவிடும் என்று தமிழக மக்கள் நம்புகின்றனர்.
அதைவிட இரண்டு நாடுகளுமே சம அளவில் தந்திரோபாய, மூலோபாய அணுகுண்டுகளை வைத்து உள்ளனர். அணுகுண்டை எவரும் இலகுவில் தொடமாட்டார்கள் இருந்தாலும் இரண்டு பக்கமுமே எந்த நேரத்திலும் அந்தப்பயம் இருந்துகொண்டே இருக்கும்.
ஏற்கனவே இறஸ்சிய உக்ரைன் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள உலகப்பொருளாதாரம் இந்தோ பாகிஸ்தான் யுத்தம் நீண்டு செல்லுமானால் நினைத்துப்பார்க்க முடியாத பேரழிவை ஏற்படுத்தும்.
அதன்காரணமாகவே உலகத்தலைவர்கள் இந்த போரை நிறுத்தும்படி அறைகூவல் விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *