இலங்கை

உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க சித்தார்த்தன், செல்வம், சுரேஸு டன் கஜேந்திரகுமார் முக்கிய பேச்சு

உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன்(சங்கு)கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியைச் சார்ந்த அதன் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அதன் பங்காளிக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோருடன் மேற்படி விடயம் தொடர்பில் உரையாடியுள்ளோம்.

அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைத்தால் இணைந்து ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.

அதேவேளை வவுனியா வடக்கு நெடுங்கேணியில் சிங்கள பௌத்த இனவாத தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றுவதனைத் தடுக்கும் வகையில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவும் தீர்மானித்துள்ளோம் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *