கவிதைகள்
வண்ணத்துப்பூச்சி… கவிதை… முல்லைஅமுதன்

உலர்ந்த உடைகளுடன் என்னையும் சேர்த்து
மடித்துவைத்தாள் மனைவி.
ஏற்கனவே
தங்கிக்கொண்ட வண்ணத்துப்பூச்சி
என்னைப் பார்த்து புன்னகைத்தது.
நீ எப்படி இங்கு வந்தாய்?
உடைகளின் வண்ணங்களை ரசித்துக்கொண்டிருந்தேன்.
மடிப்புகளின் அடுக்குகளில்
என்னைக் கண்டுகொள்ளாததால்
அப்படியேயே வந்து தங்கிக்கொண்டேன்.
சிறையாய் உணரவில்லையா?
உணர்ந்தும் எதுவும் செய்துவிட முடியாத வாழ்வு இது..
இங்கிருந்து எப்படி வெளியே போவது?
‘கவிஞரே! என் பின்னால் வாரும்’
மூர்க்கமாக உதைத்தபடி
சிறைகளிருந்து வெளியே வந்தனர்
புதிய உலகிற்கு..
முல்லைஅமுதன்
![]()