Uncategorized

இன்று விசாரணை வருமாறு ரணிலுக்கு இறுதி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு இறுதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், முறையான காரணங்கள் இன்றி ஆஜராகாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் தேவையில்லாமல் தலையீடு செய்து ஊடகங்களுக்கு அறிக்கை வெளிட்டமை தொடர்பில் உண்மைகளை தெளிவுபடுத்துவதற்காக அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கு முன்பாக அவருக்கு இரண்டு அழைப்புகள் விடுக்கப்பட்ட போதும், அவர் ஆணைக்குழுவில் ஆஜராகியிருக்கவில்லை. 25.04.2025 ஆம் திகதி ஆஜராகுமாறு அழைக்கப்பட்ட போதும் அவர் ஆஜராகாமையால் அவரை இன்று திங்கட்கிழமை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த திகதியில் நியாயமான காரணமின்றி ஆணைக்குழுவின் முன் ஆஜராகத் தவறினால், 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 126 ஆவது பிரிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *