நடிகர் திரு.சிவகுமாரின் திமிர்த்தனமான பேச்சு…. ஏலையா க.முருகதாசன்

அண்மைக் காலமாக நடிகர் திரு.சிவகுமார் அவர்கள் மிகுந்த தலைக்கனம் பிடித்தவராகவும் ஒரு மிராசுதர் போலவும் பொதுவெளியில் நடந்து வருகிறார்.
பொது நிகழ்ச்சிகளில் இரசிகர்களை அவமானப்படுத்தும் விதமாக அவர்களின் தொலைபேசிகளை பறித்தெறிந்து விடுவதான செயல்களைச் செய்தவரும்கூட.
பொது வெளியில் எவ்வாறு பண்பாளராக நடந்து கொள்ள வேண்டுமென்பதை அறியாதவராக இருப்பதற்கு காரணம் அவரைப்பற்றிய புகழாரமே.
சிவகுமாரைப் போல ஒழுக்கமானவர் எவரும் இல்லை என்பது போலவும்,அவரைப் போல
பிள்ளைகளை ஒழுங்காக யாருமே வளர்க்கவில்லை என்பது போலவும் பொதுமேடைகளில்: பலர் சொல்லிவருவதும் அவரையறியாமலே அவர் நடந்து வருவதற்குக் காரணமாகும்.
அப்படியானால் தமிழ்த்திரை உலகில் திரு.சிவகுமார் குடும்பமும் அவரின் பிள்ளைகளுந்தான் நல்லவர்கள் ஒழுக்கமானவர்கள் என்றால் மற்றைய நடிகர்,நடிகைகள் அவரவர்களின் பிள்ளைகள் நல்லவர்கள் இல்லையா ஒழுக்கம் கெட்டவர்களா?.
இதில் சீரணிக்க முடியாத விடயம் என்னவென்றால் தமிழத்திரை உலக நடிகர்களோ நடிகைகளோ திரு.சிவகுமார் அவர்களைத் தவிர தமிழ்த்திரை உலகில் மற்றையவர்கள் நல்லவர்கள் அல்ல ஒழுக்கங்கெட்டவர்கள் என்பதான அர்த்தத்தையல்லவா கொள்ள வேண்டியுள்ளது.
சொல்பவர் ஒரு நடிகராகவோ நடிகையாகவோ இருந்து அவர் தனது ஒழுக்கத்தில் சந்தேகப்பட்டு,தன்னைத்தானே தூற்றி,தன்னைத்தானே இழிவுபடுத்திச் சொல்வதாகவே முடிவு எடுக்கும் உளவியல் கருத்தியலைக் கொண்டதாகவல்லா இருக்கும். மனிதர்களின் நடத்தையை எந்த அளவு கோல் மூலம் அறிய முடியும்.
உலகில் எந்த மனிதர்களும் நூறுவீதம் சரியானவர்கள் அல்ல என்பதை பல உளவியல் ஆன்மீக அறிஞர்களே ஆய்வுநூல்கள் வழியாகச் சொல்லியிருக்கிறார்கள் சொல்லியும் வருகிறார்கள்.
நாம் பாராட்டுகளினால் மயங்கி நாமே உயர்ந்தவர் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்போமானால் அதுவே எமது வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும்.
இந்த உலகில் ஒழுக்கமான பெற்றோர்களாகவம் ஒழுக்கமான பிள்ளைகளாகவம்
கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்.அவர்களின் பெயர்கள் ஊடகங்களிலோ காணொளிகளிலோ வரவில்லை என்பதற்காகவோ அவர்களைப் பற்றி மற்றவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்பதற்காகவோ அவர்கள் போற்றுதலுக்கரியவர்கள் அல்ல என்று முடிவெடுக்கலாமா?.
நடிகர் திரு.சிவகுமார் அவர்கள் பற்றியும் அவரின் மகன்கள் பற்றியும் அவர்கள் மட்டுமே நல்லவர்கள் போல மிகையாகக் கூறியமையும் ஒரு காரணமாக அமைந்து,அன்மையில் நடைபெற்ற திரு.சூர்யா நடித்த ரெட்ரோ இசைவெளியீட்டு விழாவில்,தனது மகன் திரு.சூர்யாதான் முதன்மதலில் சிக்ஸ்பேக் கட்டுடல் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்ததாக சொல்ல பத்திரிகை வாயிலாக முதன்முதலில் 2007இல் பொல்லாதவன் படத்தில் தனுஷ் சிக்ஸ்பேக் கட்டுடலிலும் தான் 2008 ஆகஸ்டிலும் அது போன்ற உடலில் நடித்ததாக திரு.விசால் பதிலடி கொடுத்திருந்தார்.
திரு.சிவகுமார் அவர்கள் பேசிய மேடையிலேயெ யாராவது அவரின் தவறான தகவலுக்குப் பதில் சொல்லியிருக்க வேண்டும். எனினும் திரு.சிவகுமார் கோபித்தவிடுவாரோ என்று தயக்கமில்லாமல் திரு.விசால் துணிவுடன் உண்மையைச் சொன்னதற்காக அவரைப் பாராட்டலாம்.
யாகவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு
என்ற திருக்குறளை திரு.சிவகுமார் அவர்கள் மனதில் இறுத்தி,தனது வயதுக்கு தானே மரியாதை கொடுத்து, பெருமை பேசுதல்,தலைக்கனம் மிகுந்த வார்தைகளை சிதறவிடாமலிருப்பதே நல்லது.
(சிக்ஸ் பேக் விவகாரம் சிவகுமாரின் சர்ச்சைக் கருத்துக்கு விசால் பதிலடி என்ற தலைப்பில் இவ்விணையத்தளத்தில் வெளிவந்த செய்தி தொடர்பாக எனது கருத்தை கட்டுரையாக எழுதியுள்ளேன்)
![]()