முச்சந்தி
நில ஆக்கிரமிப்பு !… மத ஆக்கிரமிப்பு!… மொழி ஆக்கிரமிப்பு!… முடிவுறாத ஜேவிபியின் பேரினவாதம்… நவீனன்

(தமிழ் மொழியின் எதிர்கால இருப்புக்கு தமிழர்களின் தாயகம் விடுதலை அடைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆனால் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிக்க தொடரும் சிங்கள ஆட்சியாளர்கள் ஒரே நாடு , ஒரே இனம் என்று தமிழர்களின் உரிமைகளை பறிக்க முயல்கின்றனர் என்பதை பலரும் அறியாமல் உள்ளனர்)
ஈழத் தாயகத்தில் தொடரும் பேரினவாத ஆக்கிரமிப்புகளின் விளைவாக தமிழ் தேசிய இனத்தின் இருப்பு சிதைவடைகிறது. ஒரே மொழியும், கலாசாரமும் கொண்ட மக்களின் கூட்டமைப்பே ஒரு தேசிய இனம் என்று அழைக்கப்படுகிறது.
நீண்டகால தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் 2009இல் மௌனிக்கப்பட்டதன் பின்னர், சிறிலங்காவில் ஆட்சியேறும் பேரினவாத கட்சிகள் தமிழர்களின் தாயக கோட்பாட்டை சிதைப்பதிலேயே முனைப்பாக இருக்கின்றனர்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவெடுத்த ஒரு தொன்மையான மூத்த இனமான தமிழர் உலகெங்கும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் தமிழ் மொழி பழமை வாய்ந்த மூத்த மொழியாகவும் அறியப்பட்டது.
தமிழ் மொழியின் எதிர்கால இருப்புக்கு தமிழர்களின் தாயகம் விடுதலை அடைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆனால் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிக்க தொடரும் சிங்கள ஆட்சியாளர்கள் ஒரே நாடு , ஒரே இனம் என்ற அடிப்படையில் தமிழர்களின் உரிமைகளை பறிக்க முயல்கின்றனர் என்பதை பலரும் அறியாமல் உள்ளனர்.
தமிழ் தேசிய தாயகம் :
ஒரு தேசிய இனம் வாழும் நிலப்பகுதி, எல்லைகளோடு கூடிய நிலப்பரப்பு , ஒரு நாடாக அழைக்கப்படுகிறது. அத்துடன் ஒரு தேசம் என்பது மரபு வழியாக ஒரு மொழி, கலாசாரம் கொண்டதாக இயங்க வேண்டும்.

தேசிய இனம் வாழும் நிலப்பகுதி, எல்லைகளோடு கூடிய தமிழர் மண்ணில், மாற்றங்களை உருவகித்து- தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண வந்த அனுரவின் அரசு, அரியணை ஏற 5 மாதங்கள் முடிவடைகின்றது.
கடத்த பொதுத் தேர்தலில், ஜேவிபி 2/3 பெருன்பான்மையுடன் முழுமையாக அதிகாரத்திற்கு வந்தும், இதுவரை எந்தவித தீர்வையும் முன்மொழியக் கூட இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.
சிறிலங்கா அரசின் இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கும் 3,575.29 ஏக்கர் நிலப்பரப்பை யாழ்ப்பாணத்தில் மீள பெற்று கொடுப்பதாக வழங்கிய வாக்குறுதி தொடர்பாக எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
ஏன் அண்மையில் ஜனாதிபதியின் யாழ் விஜயத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது.
தமிழர்களின் பொருளாதாரத்திற்கு கணிசமாக பங்களிக்க கூடிய வளமான 2,624.29 ஏக்கர் தனியார் காணிகளிருந்து பூர்விக தமிழ் மக்களை விரட்டி விட்டு இராணுவம் விவசாயம் முதல் வியாபாரம் வரை செய்வதை வேடிக்கை பார்க்கின்றது ஆளும் அரசு.
தமிழர் தாயகத்தில் இது போதாதென்று 72,348 ஏக்கர் நிலத்தை வன ஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது. இதில் 14,171 ஏக்கர்நிலம் மக்கள் ஏற்கனவே வாழ்ந்த நிலங்களாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. அதே போல வன வள திணைக்களத்திடம் மட்டும் 5,000 ஏக்கர் நிலம் சிக்கி இருக்கின்றது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தையிட்டி சட்டவிரோத விகாரை:
சட்ட விரோதமாக தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து விட்டு அங்குள்ள வெறும் இரண்டரை கிலோ மீட்டர் வீதியை பயன்படுத்த விட்டனர். ஆனாலும் சட்டவிரோதமாக நிபந்தனைகளை விதித்து அதனை மீறினால் சட்ட நடவடிக்கை என்றும் இந்த அரசின் கைக்கூலிகள் மக்களை அச்சுறுத்துகின்றார்கள்.

மறுபுறம் தையிட்டி சட்டவிரோத விகாரை சூழலில் புதியகட்டுமானமொன்றை அரச ஊழியலாரான தி உயர் பொலிஸ்அதிகாரி மூலம் திறந்து வைக்கின்றார்கள்.
இதற்கெதிராக போராடும் நில சொந்தக்காரர்களான பூர்விககுடி மக்களை பயங்கரவாத விசாரணை பிரிவு மூலம் அச்றுத்துகின்றார்கள்.
அது மாத்திரமன்றி நெடுந்தீவு முதல் மருதன்கேணி வரையில் கடற்தொழிலை நம்பி வாழும் 50,000 குடும்பங்களின் கோரிக்கைகளில் ஒன்றான இழுவை மடி வலைகளை தடைசெய்யும் சட்டத்தை நடைமுறைப் படுத்த முடியாமல் இருக்கின்றார்கள்.
விசேடமாக சட்டவிரோத சுருக்கு வலை உட்பட்ட சட்டவிரோத தொழில்கள் குறித்து ஆட்சியாளர்களுக்கு எந்த புரிதலுமில்லை என்பதே உண்மையாகும்.
தேசிய இனம் என்பது என்ன?
ஒர் இனக்குழு மூலத்திலிருந்து தோன்றிய பழங்குடிகள் பொது மொழி அடிப்படையில் இனமாக ஒருங்கிணைந்து வளர்ந்து, கால வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியில் பொது மொழியும் பொது பண்பாடும் கொண்டு நிலைத்துவிட்ட சமூகம் ஒரு தேசிய இனமாக விளங்கும்.
மொழி அடிப்படையில்தான் ஒரு தேசிய இனம் உருவாகிறது. மத அடிப்படையிலோ, மரபின அடிப்படையிலோ ஒரு தேசிய இனம் உருவாகவே முடியாது.
மொழி பேசுகிற இனம் தனக்கென ஒரு நாடும் கொண்டிருந்தால், ஒரு நீண்ட வரலாறு கொண்டு ஒருதொடர் நிலத்தில் அந்த இனம் வாழ்ந்தால், அது தேசிய இனமாகிறது.ஆனையிறவு உப்பள விவகாரம்:
போரின் பின்னர் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளை பாதுகாப்பதற்கான எந்த பொறி முறைகளுமில்லை. ஆனையிறவு உப்பள விவகாரத்தில் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பை பெற்று கொடுக்க மறுத்துவிட்டு உப்பின் பெயரில் விளையாடி கொண்டு இருக்கின்றார்கள்.
பனை அபிவிருத்தி சபை , திக்கம் வடிசாலை, வட கடல்நிறுவனம் உட்பட்ட நிறுவனங்களை வினைத்திறனாக இயக்குவது குறித்து வெறுமனே பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
கூட்டுறவு அமைப்புகள் இப்போதும் கூட கவனிப்பாரற்று முயற்சிகளுமின்றி முடங்கி போய் கிடக்கின்றன. உள்ளூர் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகள் , சந்தை கழிவு நெருக்கடிகள் , உரிய காலத்தில் உரத்தை பெற்றுகொடுத்தல் என்பனவெல்லாம் இன்னமும் வாக்குறுதிகளாகவே இருக்கின்றன.
இந்திய மீனவர் ஆக்கிரமிப்பு!
ஒரு நீண்ட வரலாறு கொண்டு ஒரு தாயக கடல் வளம், இந்திய மீனவர் ஆக்கிரமிப்புகளால் இப்போது பாரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. தமிழ் மீனவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் தொழிலுக்கு போக முடியாமல் அல்லல்படுகின்றார்கள்.
மேய்ச்சலுக்காகவும், இருப்புக்காகவும், விருத்திக்காகவும் மீன்கள் வந்து நடமாடும் கடற்காணிகளை கடலட்டை பண்ணை என்கிற பெயரில் முறை தவறி வழங்கும் செயல்களும் அப்படியே தொடருகின்றன.
யாழ்ப்பாணத்தின் ஒரே ஒரு மீன்பிடி துறைமுகமான மயிலிட்டி துறைமுகம் இப்போது கூட முழுமையாக தமிழ் மீனவர்களால் பயன்படுத்த முடியாமலிருக்கின்றது.
குறிப்பாக யாழ்ப்பாண நகரை இலக்கு வைத்து இந்திய வர்த்தகர்கள் படையெடுக்கின்றார்கள். அதே போல பருவகாலங்களில் தென்னிலங்கை வர்த்தகர்கள் தமிழ் வர்த்தக நிலையங்கள ஆக்கிரமிக்கின்றார்கள்
ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள்:
யாழ்ப்பாணத்தில் மட்டும் நிலவும் 1,503 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் , சுகாதார ஊழியர்கள் நெருக்கடிகள் எனஎதற்கும் தீர்ப்பதற்கான முயற்சிகளில்லை.
சுகாதாரம் மற்றும் கல்வி கட்டமைப்புகள் எதிர்கொள்ளும் வள நெருக்கடிகளும் எந்த மாற்றமுமின்றி தொடருகின்றது. யாழ்ப்பாண மக்களுக்கான குடிநீர் பிரச்சினை அரசியலாகி இப்போதும் சிக்கி சீரழிகின்றது.
இது தவிர பாதுகாப்பற்ற புகையிரத தடவைகள், வீதிவிளக்குகள் , வீதி சமிச்சை விளக்குகள் எனஆயிரக்கணக்கான பிரச்சனைகள் நெருக்கடிகளாகவேஇருக்கின்றன. இது போதாதென்று யாழ்ப்பாணம் போதைவஸ்து கடத்தலின் கேந்திர நிலையமாகவே மாறிவாருகின்றது.
இதன் பிண்ணனியில் கடற்படை அதிகாரிகள் இருப்பதால் ஆட்சியாளர்கள் மிக அமைதியாக இருக்கின்றார்கள். மிகவிசேடமாக பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் நெருக்கடி முழுமையாகவே மறக்கப்பட்டு விட்டது.
போர் வீரர்களை பாதுகாப்போம் என ஆட்சியாளர்கள் பேசுவதால் இந்த அவலங்களை பேசுவதெல்லாம் இனவாதம் என்கின்றார்கள்.ஆனால் யாழ்ப்பாணத்திற்கு வரும் தஅனுரா குமார திசாநாயக்க உட்பட்ட ஜேவிபி தலைமைகள் இலங்கையராக வாயச்சவாடலாக
ஒன்றிணைவோம் என்கின்றார்கள்.
ஒன்றிணைவோம் என்கின்றார்கள்.அத்துடன் சிறிலங்காவில் இனவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதாக கூச்சமில்லாமல் பொய் சொல்லமளவிற்கு போலி அரசியலை நடாத்துகின்றனர்.
இது போதாதென்று ஊழலை ஒழிப்போம் என தமீண்டும் மீண்டும் சொல்லுகின்றார்கள். இங்கே வெறும் ஐந்து மாத காலப்பகுதியில் நீண்டகால நெருக்கடிகளை தீர்த்து விட முடியாது என்கின்ற போதும் எந்த முயற்சிகளுமில்லை என்பது தான் சிக்கலாக இருக்கின்றது.
![]()