பலதும் பத்தும்
வித்தியாசமான முறையில் இராஜினாமா

சிங்கப்பூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிந்த ஏஞ்சலா யோ என்பவர் தனது வேலையை இராஜினாமா செய்ய முடிவெடுத்தார். ஆனால் அதற்கு அவர் கையாண்ட வழிமுறை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனது நிறுவனம் தன்னை சரியாக நடத்தாதது குறித்து வருத்தமடைந்த ஏஞ்சலா, தனது இராஜினாமா கடிதத்தை டாய்லட் டிஸ்யூ பேப்பரில் எழுதி கொடுத்துள்ளார்.
இதை தனது லிங்கின்ட்-இன் பக்கத்தில் பகிர்ந்த ஏஞ்சலா தனது வேலையிட சூழல் குறித்து பகிர்ந்துகொண்டார்.
அவர் தனது பதிவில், ‘இந்த நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதற்கான அடையாளமாக இந்த வகையான காகிதத்தை எனது இராஜினாமாவிற்குத் தேர்ந்தெடுத்துள்ளேன். தேவைப்படும்போது பயன்படுத்தப்படும் கழிப்பறை காகிதத்தைப் போல நான் உணர்ந்தேன்’ என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.