தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த CSK!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
போட்டியில் லக்னோ அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 166/7 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் ரிஷப் பந்த் 49 பந்துகளில் 63 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 3 ஓவர்களில் 24 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு 167 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய சென்னை அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
சென்னை அணி சார்பில் ரசின் ரவீந்திரா 22 பந்துகளில் 37 ஓட்டங்களையும், ஷிவம் டூபே 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களையும் மற்றும் அணித்தலைவர் எம்.எஸ். தோனி 11 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
லக்னோ அணியின் ரவி பிஷ்னோய் 3 ஓவர்களில் 18 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
எம்.எஸ். தோனி தனது 26 ஓட்டங்கள் (11 பந்துகள்) மற்றும் ஒரு ஸ்டம்பிங், ஒரு ரன்-அவுட் ஆகியவற்றால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.