பலதும் பத்தும்

பெண்களின் வரலாற்று சிறப்புமிக்க விண்வெளி பயணம்

பிரபல அமெரிக்க பொப் பாடகி கேட்டி பெர்ரி உள்ளிட்ட ஆறு பெண்களைக் கொண்ட குழு, ப்ளூ ஒரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் மேற்கொண்ட முதல் முழு பெண்கள் விண்வெளி சுற்றுலா பயணத்தை வெற்றிகரமாக முடித்து, இன்று பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளது.

மேற்கு டெக்ஸாஸில் இருந்து காலை 9:30 மணிக்கு ஏவப்பட்ட இந்த 11 நிமிட பயணம், விண்வெளி சுற்றுலாவில் புதிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது.

நியூ ஷெப்பர்ட் ராக்கெட், பூமியில் இருந்து 100 கிமீ உயரத்தில் உள்ள கார்மன் கோட்டை கடந்து, பயணிகளுக்கு 4 நிமிட எடையின்மை அனுபவத்தை வழங்கியது.

கேட்டி பெர்ரி, விண்ணில் பூமியை கண்டபோது “What a Wonderful World” பாடலைப் பாடி உணர்ச்சிகரமான தருணத்தை உருவாக்கினார்.

பயணத்தின் முடிவில், தரையிறங்கியவுடன் மண்ணை முத்தமிட்டு நன்றி தெரிவித்த அவர், இந்தப் பயணம் தனது 4 வயது மகள் டெய்ஸிக்காகவும், அடுத்த தலைமுறை பெண்களுக்கு உத்வேகமாகவும் அமைந்ததாகக் கூறினார்.

குழு உறுப்பினர்கள்  

கேட்டி பெர்ரி (பொப் பாடகி)

லாரன் சான்செஸ் (பத்திரிகையாளர்)

கெயில் கிங் (CBS தொகுப்பாளர்)

ஐஷா போவ் (முன்னாள் நாசா விஞ்ஞானி)

அமந்தா நுயென் (செயற்பாட்டாளர், முதல் வியட்நாமிய-தென்கிழக்கு ஆசிய பயணி)

கெரியான்னே ஃபிளின் (திரைப்படத் தயாரிப்பாளர்)

1963இல் வாலண்டினா டெரெஷ்கோவாவின் தனிப் பயணத்திற்குப் பின், முதல் முறையாக முழுக்க பெண்களைக் கொண்ட இந்த விண்வெளி பயணம், பெண்களின் திறனை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது.

பயணத்தை ஆதரிக்க ஓப்ரா வின்ஃப்ரே, கிரிஸ் ஜென்னர் உள்ளிட்ட பிரபலங்கள் ஏவுதளத்தில் கூடியிருந்தனர்.

சிலர் இந்தப் பயணத்தின் செலவு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை விமர்சித்தாலும், விண்வெளி சுற்றுலாவின் வளர்ச்சிக்கு இது புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button