முச்சந்தி
ஈரான் – அமெரிக்கா போர் பகைமை… மத்திய கிழக்கில் அணுஆயுத ஆபத்து!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

பதிலடியாக ஈரானும் நீண்ட தூர பயணம் செய்யக்கூடிய அமெரிக்காவுடன் தொடர்புடைய நிலைகளை குறிவைத்து தாக்கும் திறனைக் கொண்ட ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது)
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக பகை முரண்பாடு நிலவி வருகிறது. தற்போது டொனால்ட் டிரம்ப் பதவிக் காலத்தில் இருநாடுகள் இடையேயான மோதல் என்பது இன்னும் வலுத்துள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை அமெரிக்கா விரும்பாதது தான் இந்த விவகாரத்தின் முக்கிய காரணமாகும்.
குறிப்பாக அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவும் ஈரானும் தங்கள் நிலைப்பாட்டில் முரண்பட்டு உறுதியாக இருப்பதால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் மீது இராணுவ நடவடிக்கை என்ற எச்சரிக்கையை அமெரிக்கா பின்பற்றினால், ஈரான் அப்பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்கும் என அந்த நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் அண்மையில் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஒத்துழைக்க மறுக்கிறதா ?
புதிய அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் ஒத்துழைக்க மறுத்தால் இராணுவ நடவடிக்கைகளை எதிகொள்ள நேரிடும் என அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதாகக் கூறியிருந்தார். அதில், ஈரான் கையாள இரண்டு வழிகள் உள்ளதாகவும் கூறியிருந்தார்.
ஒன்று இராணுவ ரீதியாக, அல்லது அரசியல் ரீதியான ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையிலேயே, ஈரானின் புனிதத்தை அமெரிக்கா அழிக்க முயன்றால், பிராந்தியம் முழுவதும் வெடிமருந்துக் கிடங்கில் ஒரு தீப்பொறி போல வெடித்துச் சிதறும் என நாடாளுமன்ற சபாநாயகர் முகமது கலிபாவ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இராணுவ தளங்களும், அவர்களின் கூட்டாளிகளின் தளங்களும் பாதுகாப்பாக இருக்காது என்றார். முன்னதாக டிரம்பின் இந்த நகர்வானது ஏமாற்று வேலை என்றே ஈரானிய தலைவர் கமேனி விமர்சித்திருந்தார்.
இதேவேளை ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்கி தெரிவிக்கையில், அமெரிக்கா தனது அதிகபட்ச அழுத்தமளிப்பது என்ற கொள்கையை மாற்றாவிட்டால் பேச்சுவார்த்தை சாத்தியமல்ல என்றும் கூறியிருந்தார்.அது மட்டுமின்றி, டிரம்பின் கடிதத்தை ஈரான் முழுமையாக ஆராய்ந்து, ஓமன் அரசின் வழியாக பொருத்தமான பதிலை அனுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் :
நேரடி பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்தமையால் டிரம்ப்க்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் எங்களுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால், குண்டு வீசி தாக்குவோம், அவர்கள் இதற்கு முன்பு கண்டிராத வகையில், இந்த தாக்குதல் இருக்கும்’ என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செய்தது போல் ஈரானுக்கு இரண்டாம் நிலை வரிகளை விதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் டிரம்ப் கூறினார். டிரம்ப்பின் இந்த புதிய மிரட்டலுக்கு ஈரான் தனது செயல்பாடுகள் மூலம் பதில் அளித்துள்ளது. அதாவது ஏவுகணைகளை தயார்நிலையில் வைக்கத் தொடங்கியிருக்கிறது.
அதே வேளை டிரம்பிக்கு பதில் அளித்த ஈரான் நாட்டின் அதிபர் மசூத் பெசஸ்கியான், அமெரிக்கா
உத்தரவுகள் வழங்குவதையும், எச்சரிக்கை விடுப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் ஒருபோதும் அமெரிக்காவிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். அதேசமயம் மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்றும் பதிலடி கொடுத்தார்.
உத்தரவுகள் வழங்குவதையும், எச்சரிக்கை விடுப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் ஒருபோதும் அமெரிக்காவிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். அதேசமயம் மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்றும் பதிலடி கொடுத்தார்.உலகெங்கிலும் அமெரிக்காவுடன் தொடர்புடைய நிலைகளை குறிவைத்து தாக்கும் திறனைக் கொண்ட ஏவுகணைகளை ஈரான் ராணுவம் தயார் நிலையில் வைத்துள்ளதாக அரசு ஊடகமாக தெஹ்ரான் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஏவுதலுக்கு தயார் நிலையில் உள்ள ஏவுகணைகளில் பெரும்பாலான ஏவுகணைகள், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள நிலத்தடி வசதிகளில் அமைந்துள்ளன என்றும், அவை வான்வழித் தாக்குதல்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் நெருக்கடியில் ரஷ்ய நிலைப்பாடு:
ஈரான் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால் அதன் பின்விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள நிபந்தனையும், இறுதி எச்சரிக்கை போன்ற தாக்குதல் மிரட்டல் விடுப்பது முறையற்ற நடவடிக்கை. அதை நாங்கள் கண்டிக்கிறோம். அமெரிக்கா தனது விருப்பத்தை ஈரான் மீது திணிப்பதை இது காட்டுகிறது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதன் பின்விளைவுகள் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்துபவையாக இருக்கும்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப் பிறகு, உக்ரைன் விவகாரத்தில் நாட்டின் நிலைப்பாட்டை அடியோடு மாற்றியமைத்தார். ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் உக்ரைனுக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்துவருகிறார்.இந்த நிலைப்பாடு ரஷ்யாவுக்கு சாதகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன், ரஷ்யாவுடன் நல்லுறவை ஏற்படுத்தவும் டிரம்ப் முயன்றுவருகிறார். இதன் காரணமாக, சர்வதேச விவகாரங்களில் டிரம்ப்பை நேரடியாக விமா்சிப்பதை ரஷ்ய ஜனாதிபதி புடின் தவிர்த்துவருகிறார்.
அமெரிக்கா விமானங்கள் பறக்க தடை:
தொடர்ந்து மோதல் போக்கால் விரைவில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இதனால் இருநாடுகள் இடையே கடும் பதற்றம் நிலவி வரும் சூழலில் நான்கு அரபு நாடுகள் தங்களின் வான் எல்லையில் அமெரிக்கா விமானங்கள் பறக்க அதிரடியாக தடை விதித்துள்ளன.
பொதுவாக வானில் ஒவ்வொரு நாடுகளுக்கும் வான் எல்லைகள் இருக்கும். இந்த வான்வெளி பரப்பில் விமானங்கள் பறக்க வேண்டும் என்றால் அந்தந்த நாடுகளின் அனுமதி என்பது வேண்டும்.
இப்படி அனுமதி பெற்றே அனைத்து விமானங்களும் பறந்து வருகின்றன. ஒருவேளை அனுமதியின்றி இன்னொரு நாட்டின் விமானம் ஒரு நாட்டின் வான் எல்லையில் நுழையும்போது அதனை அந்த நாட்டினரால் சுட்டு வீழ்த்த முடியும். மேலும் குறிப்பிட்ட நாட்டின் விமானங்களை ஒவ்வொரு நாடுகளும் தங்களின் வான் எல்லையில் பறக்க விடாமல் தடை செய்யவும் கூட முடியும்.
ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்றால் பிற நாடுகளின் வான் எல்லை வழியாக அந்த
நாட்டின் விமானங்கள் பறக்க வேண்டும். இப்படியான சூழலில் தான் அரபு நாடுகள் தங்களின் வான் எல்லைகளில் அமெரிக்க விமானங்கள் பறக்க அதிரடியாக தடை விதித்துள்ளன.
நாட்டின் விமானங்கள் பறக்க வேண்டும். இப்படியான சூழலில் தான் அரபு நாடுகள் தங்களின் வான் எல்லைகளில் அமெரிக்க விமானங்கள் பறக்க அதிரடியாக தடை விதித்துள்ளன.அதாவது அமெரிக்க விமானங்கள் ஈரான் எல்லையையொட்டிய தங்களின் வான் எல்லையில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கைக்கு அரபு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து இந்த தடையை விதித்துள்ளன.
இது அமெரிக்காவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் மீது உடனடியாக தாக்குதல் நடத்த முடியாத நிலை என்பது ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது குண்டுகளை வீசுவோம் என்று அமெரிக்கா கூறிய நிலையில் தற்போது தற்காலிகமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானை தாக்கும் நோக்கத்தில் அரபு நாடுகளின் வான் எல்லையில் அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் உளவு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை என்பது வான் எல்லையில் விமானங்கள் பறப்பதற்கு மட்டுமின்றி எரிபொருள் மாற்றம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அடுத்த மாதம் டொனால்ட் டிரம்ப் பல்வேறு அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் மீதான தாக்குதலுக்கு அரபு நாடுகளின் ஆதரவு என்பது அமெரிக்காவுக்கு கிடைக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாகிறது.
![]()