பலதும் பத்தும்

உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் அதிகம் வசிக்கும் ஒரு நகரம்

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டின் பட்டியலின்படி, உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் அதிகம் வசிக்கும் நகரம் என்ற பட்டத்தை நியூயார்க் நகரம் மீண்டும் ஒருமுறை பெற்றுள்ளது.

நியூயார்க் நகரில் 123 பில்லியனர்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 759 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது. தொடர்ச்சியாக நான்காவது முறை, நீயூயார்க் நகரம் இந்த அந்தஸ்தைப் பெறுகிறது.

அத்துடன், கோடீஸ்வரர்கள் அந்தஸ்தை புதிதாக பெறும் 15 பேர்களும் இதே நியூயார்க் நகரில் வசித்து வருகின்றனர். ரஷ்யாவின் மாஸ்கோ நகரம் இரண்டாமிடத்தில் உள்ளது. இங்கே 90 கோடீஸ்வரர்கள் வசிக்கின்றனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16 பேர்கள் புதிதாக இணைந்துள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 409 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது. ஹொங்ஹொங் நகரம் 309 பில்லியன் டொலர் சொத்து மதிப்புள்ள 72 பில்லியனர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

மும்பை நகரம்
நான்காவது இடத்தில் இருக்கும் லண்டனில், புதிதாக 9 பேர்களுடன் மொத்தம் 71 கோடீஸ்வரர்கள் வசிக்கின்றனர். 68 பில்லியனர்களுடன் சீனாவின் பெய்ஜிங் நகரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் மும்பை நகரம் நான்காவது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு சரிந்துள்ளது, மொத்த சொத்து மதிப்பு 349 பில்லியன் டொலர்களுடன் 67 கோடீஸ்வரர்கள் தற்போது வசித்து வருகின்றனர்.

60 கோடீஸ்வரர்களுடன் சிங்கப்பூர் 7வது இடத்தில் உள்ளது. இங்குள்ள கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 259 பில்லியன் டொலர். ஷாங்காய் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய இரு நகரங்களும் தலா 58 கோடீஸ்வரர்களுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.

பத்தாவது இடத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளது. இங்குள்ள 56 கோட்டிஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 243 பில்லியன் டொலர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button