பலதும் பத்தும்

சர்க்கரை நோய் உள்ளவர்களா நீங்கள்!

வெரிகோஸ் வெயின்ஸ் (விரிசுருள் சிரை நோய்) என்பது காலில் இருந்து இரத்தத்தை இதயத்தை நோக்கி செலுத்தும் இரத்த நாளங்கள் சுருண்டு முறுக்கி வீங்கி இருக்கும் நிலையாகும். இது பெரும்பாலும் கால், கணுக்கால், தொடை போன்ற இடங்களில் ஏற்படுகிறது.

ஆண்களை விட பெண்களிடையே இது அதிகம் காணப்படுகிறது. ரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் சரியாக செயல்படத் தவறும் போது, ரத்தம் தேங்கி ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிப்பதால் இது ஏற்படுகிறது.

வெரிகோஸ் வெயின்ஸ் ஏற்பட முக்கிய காரணம்,

குடும்ப வரலாறு, வயது முதிர்வினால் ரத்த நாளங்களில் உள்ள வால்வுகளின் குறைபாடு, நீண்ட நேரம் நிற்பது அல்லது உட்கார்ந்து கொண்டிருப்பது, கர்ப்ப காலம் மற்றும் மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், உடல் பருமன், சர்க்கரை நோய், தசை இழப்பு மற்றும் அதிக அளவு காபின் உட்கொள்ளுதல் காரணமாகும்.

வெரிகோஸ் வெயின்ஸ் என்பது சர்க்கரை நோயின் அறிகுறி அல்ல. இருப்பினும் கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை வெரிகோஸ் வெயின்ஸ் ஏற்பட வழிவகுக்கும்.

காலில் வெளிப்புற அழுத்தத்தை அதிகரித்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்த கால் உறை அணிதல், லேசர் கதிர் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட ரத்த நாளங்களை மூடச்செய்யும் சிகிச்சை, கதிரியக்க வெப்ப ஆற்றலால் சேதமடைந்த நாளங்களை மூடுதல் சிகிச்சை, ஸ்க்லீரோதெரபி, ஆம்புலேட்டரி பிளெபெக்டோமி சிகிச்சை போன்ற வழி முறைகள் இதற்கு தீர்வாக அமையும்.

வெரிகோஸ் வெயின்ஸ் வராமல் தடுக்க பின்பற்ற வேண்டியவை,

தூங்கும் போது கால்களை உயர்த்தி வையுங்கள். இடுப்புக்கு கீழ் இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம். அதிக நேரம் நிற்பதை தவிர்க்கவும். உட்கார்ந்து கொண்டே பணி செய்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது எழுந்து சிறிது நேரம் நடக்க வேண்டும்.

தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையை குறைக்க அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஹை ஹீல்ஸ் காலணிகள் அணியக்கூடாது. புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button