பலதும் பத்தும்
100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சட்டவிரோத கருக்கலைப்பு

100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சட்டவிரோத கருக்கலைப்பினை மேற்கொண்ட குற்றச் சாட்டில் செவிலியர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி வசந்தம் நகர் பகுதியில், சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சுற்றிவளைப்பின் போதே குறித்த விடயம் அம்பலமாகியுள்ளது.
இதன்போது குறித்த செவிலியருடன் தொடர்பை பேணி வந்த மேலும் இருவரைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.