முச்சந்தி

கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டபடிப்பின் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பதவி நீக்கம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டபடிப்பின் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாக முன்னாள் உபவேந்தரால் நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஜீவரெத்தினம் கென்னடியை உடனடியாக அந்தபதலியில் இருந்து நீக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய அவரை அந்த பதவியில் இருந்து கடந்த 25ஆம் திகதி முதல் கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தர் ரி.பிரபாகரன் நீக்கியுள்ளார்.

கடந்த வருடம் முன்னாள் உபவேந்தர் கனகசிங்கம் புதிதாக உருவாக்கப்பட்ட பட்டபடிப்பின் கற்கைகள் பீடத்தின் முதல் பீடாதிபதியாக பேராசிரியர் ஜீவரெத்தினம் கென்னடியை கடந்த 2024-03-01 ஆம் திகதி அவருக்கான பதவி நியமனத்தை வழங்கி அவரை பீடத்தின் பீடாதிபதியாக நியமித்தார்.

இந்த நிலையில் இந்த நியமனம் மோசடியாக இடம்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இலங்கை சட்டத்தின் பிரகாரம் ஒரு அரச நிறுவனத்தில் வரையறையப்பட்ட வெற்றிடம் இருந்தால் மட்டும் அதற்காக ஒருவரை நியமிக்கமுடியும். அந்த வெற்றிடத்துக்கான அனுமதியை நிர்வாக திட்டமிடல் திணைக்களம் (டி.எம்.எஸ்) தான் வழங்கவேண்டும்.
ஆனால் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு மற்றும் நிர்வாக திட்டமிடல் திணைக்களம் அனுமதி வழங்காமல் நியமித்து நியமனம் வழங்கியுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நியமிக்கப்பட்டிருந்த குறித்த பீடத்தின் பீடாதிபதி பதவியில் இருந்து பீடாதிபதியை நீக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு பதில் உபவேந்தருக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய அவர் அந்த பீடாதிபதியை பதவியில் கடந்த 25ஆம் திகதி முதல் நீக்கியுள்ளார்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button