முச்சந்தி

வீழ்ச்சியுறும் உலக ஊடக சுதந்திரம்: அமெரிக்க குரலை (VOA) மூடும் டிரம்ப்…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

உலகெங்கும் அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்கும் ஊடகமான ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’ (Voice of America) செய்தி நிறுவனத்தை மூட ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
மூடப்படும் அமெரிக்க குரல் – VOA:
அமெரிக்க அரசின் நிதியுதவி பெற்ற செய்தி நிறுவனமான வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவை டிரம்புக்கு எதிரானது மற்றும் தீவிரமானது என்று குற்றம் சாட்டி, அதை முடக்குவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
இதேவேளை உலகின் அனைத்து பாகங்களிலும் தொடர்பூடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதாக சுயாதீன (Freedom House) கண்காணிப்புக் குழுவின் கணிப்பீடு அண்மையில் தெரிவித்துள்ளது. கடந்த பல வருடங்களாக தொடர்பூடக சுதந்திரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்து வருவதாக வாஷிங்டனை தளமாகக் கொண்டு செயற்படும் அமைப்பு கூறியுள்ளது.
ஒரு காலத்தில் தங்கள் பிரச்சார நலனுக்காக பயன்படுத்திய ஊடகங்களை இப்போது அந்த நாட்டின் அரசே முடக்குவது என்பது இந்த ஊடகங்களின் நம்பகத் தன்மையை இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
ஊடக சுதந்திர வீழ்ச்சி:
கடந்த பல வருடங்களாக தொடர்பூடக சுதந்திரம் வீழ்ச்சியடைந்து வருவதாக
வாஷிங்டனை தளமாகக் கொண்டு செயற்படும் சுயாதீன கண்காணிப்புக் குழு அமைப்பு கூறியுள்ளது.
உலகின் அனைத்து பாகங்களிலும் தொடர்பூடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதாக சுயாதீன கண்காணிப்புக் குழுவின் கணிப்பீடு அண்மையில் தெரிவித்துள்ளது.
உலகில் சராசரியாக 6 பேர்களில் ஒருவர் மாத்திரமே தொடர்பு சாதன சுதந்திரத்துடன் இருப்பதாகவும் அது கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தொடர்பூடகங்கள் செயற்படுகின்ற அரசியல் மற்றும் சட்ட சூழ்நிலை குறித்து இந்த அமைப்பு ஆராய்ந்து வருகிறது.
தொடர்பூடகம் மீது பொருளாதார அழுத்தம் :
தொடர்பூடகங்கள் எதிர்கொள்கின்ற பொருளாதார அழுத்தங்கள் குறித்தும் அது கவனம் செலுத்துகிறது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு நாடும் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
இந்த பட்டியலை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது உலக மட்டத்தில் கடந்த வருடத்தில் மீண்டும் ஊடக சுதந்திரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை தெரியக்கூடியதாக இருக்கின்றது என்று அந்த அமைப்பு கூறுகின்றது.
மிகவும் முக்கியமான மாற்றம் என்பது சகாராவுக்கு தென்பகுதியில் உள்ள ஆபிரிக்க நாடுகளில்தான் நடந்துள்ளது. மெக்சிகோவில் ஊடக சுதந்திரம் கிடையாது என்ற நிலை எட்டப்பட்டுள்ளதுடன், இலத்தின் அமெரிக்கா குறித்தும் கவலைகள் அதிகரித்துள்ளன.
ஹொண்டியூரஸும் ஊடக சுதந்திரம் அற்ற நாடாகவே கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக செய்தியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறையின் காரணமாக தனது பிராந்தியத்தில் ஊடக சுதந்திரம் பெரும் வீழ்ச்சியடையும் நாடாக ஈரான் பதிவாகியுள்ளது.
ஆசிய பசுசிபிக் பிராந்தியத்தில், குறிப்பாக பூட்டான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் ஊடக சுதந்திரத்தை பறிக்கும் நகர்வுகள் குறித்தும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
பேச்சுச் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் மற்றும் கட்டுப்படுத்தப்படாத கருத்துப் பரிமாற்றம் ஆகிய விடயங்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் இந்த அமைப்பு வலியுறுத்துகிறது.
வலதுசாரி ஊடக ஆதிக்கம் :
இதேவேளை அமெரிக்காவில் வரி செலுத்துவோர் இனி தீவிர பிரச்சாரத்திற்கு அடிமையாகாமல் இருப்பதை உறுதி செய்யும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது . அமெரிக்காவில் அரசியல்வாதிகள் , முக்கிய தலைவர்களை விமர்சிக்கும் ஊடகங்களின் நிலை தற்போது மிகவும் மோசமாகி உள்ளது
சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் முதன்மையன ஊடக சேவையாக இருக்கும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா – VOA, இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனிய நாஜி பிரச்சாரத்தை எதிர்க்க உருவாக்கப்பட்டது.
இந்த ஊடக நிகழ்ச்சிகள் மூலமாக தற்போது உலகளவில் ஒவ்வொரு வாரமும் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் ஊடக இயக்குனர் மைக் அப்ரமோவிட்ஸ், தனது நிறுவனத்தின் 1,300 பேர் கொண்ட அவரது முழு ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.  இன்று அமெரிக்காவுடன் பகைமையை கொண்டுள்ள ஈரான், சீனா மற்றும் ரஷ்யா போன்றவை அமெரிக்காவை இழிவுபடுத்துவதற்காக தவறான கதைகளை உருவாக்குவதில் பில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்து வருகின்றன என்று அப்ரமோவிட்ஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த மூடும் உத்தரவு வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவை அதன் முக்கியமான பணியைச் செய்ய முடியாமல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த புதிய உத்தரவால் சுதந்திரமான பத்திரிகைக்கான அமெரிக்காவின் நீண்டகால உறுதிப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று அமெரிக்க தேசிய பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விவகாரம் ஒரு முழு செய்தி அறையையும் ஒரே இரவில் ஓரங்கட்ட முடிந்தால், அது பத்திரிகை சுதந்திரத்தின் நிலையைப் பற்றி என்ன ஆகும் என்று தெரியவில்லை. இந்த மூடு விழா வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவில் சுயாதீன ஊடகத்தின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தும் ஒரு அடிப்படை மாற்றமாகும் என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகம் அரசின் எதிரி அல்ல!
சுதந்திரமான பத்திரிகை என்பது ஒரு அரசின் எதிரி அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும். ஒரு மீண்டெழும் தன்மையுள்ள மற்றும் செழிப்பான சமுதாயத்திற்கு வழி வகுக்கும் ஆட்சியாளர்களின் மிகப்பெரிய நண்பர்களுள் ஒன்றாகும்.
இணைய அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் உள்ளடக்கத்தை தணிக்கை செய்வதன் மூலமும் பொதுமக்களிடமிருந்து தகவல்களைத் தடுக்கும் முயற்சிகளை அரசாங்கங்கள் தீவிரப்படுத்தி வருகின்றன.
அதற்கெதிராக மக்கள் குரல்கொடுக்க வேண்டும். கருத்துச் சுதந்திரம், புத்தாக்கம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றில் அது ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான விளைவுகள் குறித்து மனித உரிமைகள் அமைப்புகள் நீண்ட காலமாக கவலை தெரிவித்தது வருகின்றன.
எலோன் மஸ்க் X ஊடக ஆதிக்கம் :
அதிபர் டிரம்பின் உயர் ஆலோசகருமான எலோன் மஸ்க், தனது சமூக ஊடக தளமான X ஐப் பயன்படுத்தி வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவை மூட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி வீடற்றவர்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்களுக்கு நிதியளிப்பது உட்பட பல பொது நிறுவனங்களுக்கான நிதியையும் குறைத்து உள்ளார்.
அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள் தனக்கு எதிராகவும், பாரபட்சமாக இருப்பதாக ஜனாதிபதி தொடர்ந்து கூறி வந்துள்ளார். அதே வேளை டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் அதிபர் டிரம்ப் ஒரு உரையின் போது அவர் CNN மற்றும் MSNBC நிறுவனங்களை ஊழல் நிறைந்தவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button