முச்சந்தி

வாக்காளருக்கு செலவிடக்கூடிய தொகை; மன்னாருக்கு 74 ரூபா; அம்பாறைக்கு 160 ரூபா

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் வாக்காளர்களுக்காக செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி தேர்தல் நடைபெறவுள்ள பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகள் தவிர்ந்த ஏனைய 336 உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்பாளர் ஒருவரால் வாக்காளர் ஒருவருக்காக செலவிடக் கூடிய ஆகக் கூடிய தொகை தொடர்பான விபரங்கள் ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வேட்பாளர் ஒருவர் ஆகக் குறைந்தளவில் செலவிடக் கூடிய தொகையாக 74 ரூபா காணப்படுவதுடன், இந்தத் தொகை மன்னார் நகர சபைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆகக் கூடிய தொகையாக 160 ரூபா காணப்படுவதுடன், இது அம்பாறை மாவட்டத்தின் லாஹுகல பிரதேச சபைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்பாளர்களால் வாக்காளர்களுக்காக செலவிடக்கூடிய தொகை தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button