முச்சந்தி
துருக்கியில் தொடரும் அதிகார போட்டி; அதிபரை எதிர்த்த இஸ்தான்புல் மேயர் கைது… ஐங்கரன் விக்கினேஸ்வரா

துருக்கியில் அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, இஸ்தான்புல் மேயர் எக்ரெம் இமாமோக்லுவை அதிகாரிகள் கைது செய்தனர். அதையடுத்து, நாடெங்கிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.மதச்சார்பற்ற குடியரசு மக்கள் கட்சியைச் சேர்ந்த எக்ரெம் இமாமோக்லு, துருக்கியில், தனது கட்சியால் அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்தான்புல் மேயர் எக்ரெம் இமாமோக்லு (Ekrem Imamoglu) காவல்துறையினர் தடுத்துவைத்ததை அடுத்து ஆர்பாட்டங்கள் மூண்டன. துருக்கியேயில் பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
துருக்கு அதிபர் தாயிப் எர்துவானின் (Tayyip Erdogan) தேர்தல் எதிரியாகத் எக்ரெம் இமாமோக்லு கருதப்படுகிறார். இவர் ஊழல் குற்றங்களுக்காகவும் பயங்கரவாதக் குழுவுக்கு உதவியதற்காகவும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆனால் தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை எக்ரெம் இமாமோக்லு
மறுத்துள்ளார். ஆத்துடன் ஆர்ப்பாட்டங்களை நடத்துவோர் அவருக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
நூற்றுக் கணக்கானோர் காவல்துறையினருடன் மோதினர். எக்ரெம் இமாமோக்லு

கைது நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என்று அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
எக்ரெம் இமாமோக்லு அதிபர் வேட்பாளராய்த் தெரிவு செய்யப்படுவதற்குச் சில நாள்கள் முன்னதாக அவர் கைது செய்யபட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக தெரிவு செய்யப்பட்ட துருக்கி மேயர் சிறையில் அடைக்கப்பட்டதால் பொது மக்கள் கடும் சீற்றம் அடைந்தனர். பெரும் ஆர்ப்பாட்டங்களால் பொலிஸாருடன் மோதல் போக்கும் நடந்தது.
இவரே துருக்கி அதிபர் தாயிப் எர்துவானின் வலுவான அரசியல் போட்டியாளர்களில்
ஒருவராகக் காணப்படுகிறார். அவர் ஊழல் மற்றும் பயங்கரவாதக் குழுவுக்கு உதவியதாக குற்றம் சாட்டி, அவரை குற்றவியல் அமைப்பின் தலைவர் என்றும் அரசால் வஞ்சிக்கப்பட்டார்.
ஒருவராகக் காணப்படுகிறார். அவர் ஊழல் மற்றும் பயங்கரவாதக் குழுவுக்கு உதவியதாக குற்றம் சாட்டி, அவரை குற்றவியல் அமைப்பின் தலைவர் என்றும் அரசால் வஞ்சிக்கப்பட்டார்.2028 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான குடியரசு மக்கள் கட்சியின் நியமனத்தை அவர் பெற்றுள்ள நிலையிலேயே அவர் உத்தியோகபூர்வமாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இஸ்தான்புல் மேயரை கைதுசெய்துள்ள அதிகாரிகள் அவருக்கு எதிராக குற்றவியல் அமைப்பொன்றை உருவாக்கி வழிநடத்தியது. இலஞ்சம் வாங்கியது, கப்பம் பெற்றது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
கடந்த வருடம் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலின் போது இடதுசாரி அரசியல் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்தன் மூலம் அவர் ஆயுதமேந்திய பயங்கரவாத குழுவிற்கு
ஆதரவளித்தார் என அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
ஆதரவளித்தார் என அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.எக்ரெம் இமாமோக்லு சிலிவ்ரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அவர் மேயர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என எக்ரெம் இமாமோக்லு
தெரிவித்துள்ளார். நான் ஒருபோதும் அடிபணிய மாட்டேன் என கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் அவர் சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது கைது துருக்கியின் ஜனநாயகத்தின் மீதான கறை என தெரிவித்துள்ள அவர் நீதி நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இஸ்தான்புலில் ஆர்ப்பாட்டம்:
துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் நகரமண்டபத்திற்கு அருகே ஐந்தாவது நாளாக கூடிய பெருமளவு மக்கள் துருக்கியின் தேசிய கொடியுடன் பேராட்டங்களில் ஈடுபட்டனர்.
கலகமடக்கும் பொலிஸாருக்கு முன்னாள் அவர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். பொலிஸார் நீர் பாய்ச்சி பிரயோகத்தில் ஈடுபடுவதையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பெப்பர் ஸ்பிரேயினை பயன்படுத்துவதையும் காணமுடிந்தது.இஸ்தான்புல் நகரமண்டபத்திற்கு காணப்பட்ட பெருமளவு மக்கள் முன்னிலையில் உரையாற்றிய கைதுசெய்யப்பட்டுள்ள மேயரின் மனைவி தனது கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதி அனைவரினதும் மனச்சாட்சியை உலுக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
எக்ரமுக்கு இழைக்கப்பட்ட அநீதி போன்று தங்களிற்கு எதிராகவும் அநீதி இழைக்கப்பட்டதாக
ஒவ்வொருவரும் கருதுகின்றனர், என தெரிவித்துள்ள அவர் அவர் உங்களை தோற்கடிப்பார் நீங்கள் தோல்வியடைவீர்கள் என தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரும் கருதுகின்றனர், என தெரிவித்துள்ள அவர் அவர் உங்களை தோற்கடிப்பார் நீங்கள் தோல்வியடைவீர்கள் என தெரிவித்துள்ளார்.துருக்கியின் மாகாணங்களில் 55 ஆர்ப்பாட்டம்:
2013 இல் உள்ளுர் பூங்கா அழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஜெசி ஆர்ப்பாட்டத்தின் பின்னர் துருக்கி சந்தித்துள்ள மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து நாட்களாக துருக்கியின் 88 மாகாணங்களில் 55 மாகாணங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக ஏஎவ்பி தெரிவித்துள்ளது.
துருக்கி ஜனாதிபதி தாயிப் எர்துவானின் இந்த ஆர்ப்பாட்டங்களை கண்டித்துள்ளதுடன் இது
அமைதியை குலைக்கும்மக்களை துருவமயப்படுத்தும் என தெரிவித்துள்ளார்
அமைதியை குலைக்கும்மக்களை துருவமயப்படுத்தும் என தெரிவித்துள்ளார்விசாரணையொன்றின் ஒரு பகுதியாக இதுவரை 100க்கும் அதிகமான அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்கள் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![]()