பல்கலைக்கழக கல்விக் கற்றலுக்காக உதவி கோருகிறார்

செல்வகுமார் விதுஷ் வின்சட் வீதி
இராஜபுரம்
கரடியனாறு
பல்கலைக்கழக கல்வி கற்றலுக்கான உதவிக் கோரல்
கனம் ஐயா,
மேற்படி முகவரியை கொண்ட செ.விதுஷ் ஆகிய நான் அறியத்தருவது யாதெனின் எனது குடும்பம் ஐந்து பேரைக் கொண்ட குடும்பமாகும்.
அதில் எனது அப்பா உயர் குருதி அமுக்க நோயை கொண்டவராவார். அத்தோடு கூலி தொழிலுக்குச் சென்று எங்களை பராமரித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கூலித்தொழில் நிரந்தரமாக கிடைப்பதில்லை. அதனைத் தொடர்ந்து நான் மட்/மமே /கித்துள் ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயத்தில் 2023 ( 2024 ) உயர்தரத்தில் புவியியல் – A, வரலாறு – A, நாடகமும் அரங்கியலில் – B சித்தியும் பெற்று பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ளேன் என்பதை தங்களுக்கு அறிய தருவதோடு எனது நிலையை பரிசீலித்து எனது பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைக்கு உதவி செய்யுமாறு மிகத் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
இங்கனம்
உண்மையுள்ள
விதுஷ்
மேலதிக விபரங்களுக்கு: +61 470 156 818