முச்சந்தி

உள்ளூராட்சித் தேர்தலுக்கு 3,000க்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள்

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 3,000க்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு ( பெப்ரல்) அமைப்பு தெரிவித்துள்ளது.

கண்காணிப்பு செயல்முறைக்காக ஒரு தேர்தல் தொகுதிக்கு ஒருவர் வீதம் 160 அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இந்தத் தேர்தல் கண்காணிப்பு முயற்சியின் நிர்வாக இயக்குநராக மஞ்சுள கஜநாயக்க செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் மே 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், வேட்பாளர்களுக்கான செலவு வரம்பு அடுத்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button