முச்சந்தி

Breaking – தேஷபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தேசபந்து தென்னகோனால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு இன்று வியாழக்கிழமை (20.03) மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யுமாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னனகோன், நேற்று (19.03) நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இது தொடர்பான உண்மைகளை பரிசீலித்த பின்னர், பிணை வழங்குவதா இல்லையா என்பது குறித்து இன்று (20) தீர்மானிக்கப்படும் என கூறி, முன்னாள் பொலிஸ் மா அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து, தேசபந்து தென்னகோன் நேற்று (19) பிற்பகல் விசேட பாதுகாப்பின் கீழ் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button