முச்சந்தி
தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர் வெளியேறுகிறார்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் முக்கிய செயற்பாட்டாளர் பி.அலஸ்ரின் (றஜனி) இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூல் பதிவின் ஊடாக அவர் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நான் உயிரிலும் மேலாக நேசித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு முற்றுமுழுதாக வெளியேறுகின்றேன். நன்றி என அந்த முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடமராட்சி முள்ளியான் வட்டாரத்தில் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் எழுந்த முரண்பாடே, அலஸ்ரின் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறுவதற்கான காரணமெனத் தெரியவருகிறது.
![]()